சமூகத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்ற கருத்து பல இடங்களில் பேசப்பட்டாலும், சில நேரங்களில் ஆண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள் மற்றும் அவர்களுக்கு கிடைக்காத ஆதரவுகளை பற்றி அதிகமாக பேசுவதில்லை. திருமண உறவுகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுகின்றன, ஆனால் அதே நேரத்தில், ஆண்கள் எதிர்கொள்ளும் அவல நிலைகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக பணியாற்றிய மானவ் சர்மா என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது இறப்புக்கு முன், சமூகத்திடம் ஆண்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதையும், அவர்களுக்கும் பாதுகாப்பு தேவை என்பதையும் உணர்த்தும் வகையில் ஒரு உணர்ச்சிவசப்பட்ட வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம், ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய ஒரு முக்கியமான விவாதத்தை எழுப்பியுள்ளது.

பிப்ரவரி 24, 2025 அன்று, உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தனது வீட்டில் மானவ் சர்மா உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவருடைய உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மானவ் சர்மாவின் மரணத்திற்கு அவருடைய திருமண வாழ்க்கையே முக்கிய காரணம் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். திருமணமாகி ஒரு வருடமே ஆன நிலையில், அவர் தனது மனைவியால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முன் வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்மா தற்கொலை செய்யும் முன் தனது மொபைல் போனில் சுமார் 7 நிமிடங்கள் கொண்ட ஒரு வீடியோ பதிவுசெய்துள்ளார். அந்த வீடியோவில், அவர் மன அழுத்தம் மற்றும் விரக்தியால் சோகத்துடன் பேசுகிறார். "தயவுசெய்து, ஆண்களைப் பற்றிப் பேசுங்கள். யாராவது, எங்காவது, எப்போது எனினும் ஆண்களின் பிரச்சினைகள் குறித்து சிந்தியுங்கள்." "இந்தச் செய்தி காவல்துறை மற்றும் சட்ட அமைப்பிற்காக. ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவை. நிலைமை இப்படியே சென்றால், நம்மைப் போன்ற ஆண்களுக்கு எதிர்காலம் இருக்காது." "நான் என் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தேன்.
ஆனால் நான் என்ன செய்ய முடியும்? இனி அது ஒரு பொருட்டல்ல." "நான் இதற்கு முன் பல முறை தற்கொலை செய்ய முயற்சித்தேன். ஆனால் இப்போது இதை முடிக்க தீர்மானித்துள்ளேன்." வீடியோவில் அவர் மிகவும் கண்கலங்கி, தன் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டபடியே தனது முடிவை அறிவித்தார். பெரும்பாலும், ஆண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தாமல் மௌனமாக துயரத்தை தாங்கிக்கொள்கிறார்கள்.
"ஆண்கள் அழக்கூடாது" என்ற மனப்போக்கு சமுதாயத்தில் பரவலாக இருப்பதால், அவர்கள் தங்கள் வலியை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
திருமண உறவுகளில் பெரும்பாலும் பெண்களின் பிரச்சினைகள் அதிகமாக பேசப்படுகின்றன. ஆனால் சில சந்தர்ப்பங்களில், ஆண்களும் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த விஷயம் பெரும்பாலும் உளவியல், சமூக அழுத்தங்கள் காரணமாக பேசப்படாமல் மறைந்து விடுகிறது.
ஆண்கள் வலுவானவர்கள், அவர்கள் தற்காப்பு செய்து கொள்ளலாம் என்ற பொதுவான எண்ணம் சமுதாயத்தில் இருக்கிறது. இதனால், ஆண்கள் மனநலம் குறித்த பிரச்சினைகளை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுவே அவர்களை தனிமைப்படுத்துகிறது. சர்மாவின் குடும்பத்தினர் கூறுவதற்கேற்ப, அவரது மனைவியால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தான் அவருடைய தற்கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
குடும்பத்தினர் மேலும் கூறியதாவது: அவரது மனைவி அவரை தொடர்ந்து மனஅழுத்தத்திற்க்கு உள்ளாக்கினார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தத்தை அவரால் சமாளிக்க முடியவில்லை. இவரது மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த பிறகு, அவர் முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தார். சம்பவம் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை சம்பவம் தொடர்பாக ஆக்ரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வீடியோவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத்தினரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது..
எந்த உறவிலும் ஒருபுறமாக மட்டும் மனவெதுப்பை எதிர்கொள்வதில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்கள் அழக்கூடாது, மனவலிமை இருக்க வேண்டும் போன்ற பழைய கருத்துகளை மாற்றி, அவர்களுக்கும் மனநலம் குறித்த ஆதரவை வழங்கவேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications