இந்தியாவில் கோடை காலம் வந்துவிட்டாலே ஏசி, ஃப்ரிஜ், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் ஆகியவற்றின் விற்பனை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த ஆண்டு ஏசி விற்பனை எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு விற்பனை சூடுபிடிக்கவில்லை என்றாலும், ஏசி உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
இந்த ஆண்டு 11.5 மில்லியனும் அதிகமான ஏசிகள் இந்தியாவில் விற்பனையாகும், இதன் மூலம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட இயலும் என ஏசி உற்பத்தியாளர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.

வெப்பம் அதிகரிப்பு டூ விற்பனை அதிகரிப்பு: ஏசி உற்பத்தித் துறையின் முன்னணி நிறுவனங்கள், இந்த ஆண்டு "கடுமையான வெயில் குறித்த வானிலை அறிவிப்புகளும், மக்களிடம் இருக்கும் கூடுதல் வருமானம், எளிய கடன் சேவைகள் ஆகியவை நாட்டில் ஏசி விற்பனையை புதிய உயர்வுக்கு கொண்டு செய்யும் என நம்புகின்றனர்.
டார்கெட் 25% வளர்ச்சி!: டைக்கின், பானசோனிக், எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ், ப்ளூ ஸ்டார், கோதரெஜ் அப்ளைன்சஸ் மற்றும் Lloyd போன்ற முன்னணி ஏசி உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு 25 சதவீதம் வரை வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, 3ஆம் கட்ட நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் ஏசி விற்பனைக்கு புதிய சந்தையாக உருவாகி வருவதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று.
5 ஸ்டார் ஏசி பிரபலம்: மின்சாரத்தைச் சிக்கனமாகச் செலவு செய்யும் 5 ஸ்டார் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் கொண்ட ஏசி மாடல்கள் பெருநகரங்களிலும், பிற பெரிய சந்தைகளிலும் அதிகம் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெயில் காலம்: அதே நேரம், மலிவு விலையிலான 3 ஸ்டார் ஏசிக்கள், சிறு நகரம் மற்றும் கிராமப்புற சந்தைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் எனக் கருதப்படுகிறது. எனவே, வெயில் காலம் முடிவதற்குள், ஏசி விற்பனை எதிர்பார்க்கப்பட்ட இலக்கை எட்டும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
கோடை மழை: கடந்த ஆண்டு கோடை காலத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ததால், கோடை கால விற்பனை பாதிக்கப்பட்டது. நாட்டின் மொத்த வர்த்தக சந்தையில், வட இந்தியாவில் மட்டுமே ஏசி, ஃப்ரிஜ், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற கோடை கால பொருட்களின் 50 சதவீத விற்பனை சந்தை கொண்டு உள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு வட இந்திய பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக மழை பெய்ததால், வெயில் குறைவாக இருந்தது. இதன் காரணமாக, இந்த கோடை கால பொருட்களின் விற்பனை 26 சதவீதம் வரை சரிவு கண்டது.
குளிர்பான விற்பனை: உதாரணமாக, குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனமான கோகோ கோலா (Coca-Cola), ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பெய்த மழையால் இந்திய வியாபாரம் பாதிக்கப்பட்டது என்று, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அவர்களின் உலகளாவிய லாப அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இந்த வருடம் வெயில் அதிகமாக இருக்கும் என முன்கூட்டியே கணிப்புகள் வந்துள்ளதால் இந்த வருடம் குளிர்பான விற்பனை அதிகரிக்கும் எனவும் சந்தை கணிப்புகள் கூறுகிறது.
ஐஸ்கிரீம் விற்பனை: வெப்பம் அதிகரிக்கும் என காரணத்தால், இந்த கோடை காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் பால் சார்ந்த
பொருட்களின் விற்பனை 15-20 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications