இந்தியாவில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகள் அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு வெப்ப அலை மேசமாக இருக்கும், இதனால் இந்த 4 மாநிலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாநிலத்தில் வெப்ப நிலை அதிகரிக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
அதிகப்படியான வெப்ப நிலை பொருளாதாரத்தையும், மக்களின் நிதி நிலையையும் பாதிக்கும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். வெப்ப நிலை உயர்வால் பல துறைகளில், பல பிரிவுகளில் ஊழியர்கள் முதல் நிறுவனங்கள் வரையில் பாதிக்கும் என்பது மட்டும் அல்லாமல் மக்களின் வருமானத்தில் பெரிய ஓட்டை போடுவது மட்டும் அல்லாமல் செலவுகளையும் அதிகரிக்கும்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ள பட்டியலில் தமிழ்நாடு இல்லை என்றாலும் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உருவாகும் வெப்ப அலை தமிழ்நாட்டையும் தாக்கும், இதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு படி மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 17 வரையிலும், வட கடலோர ஆந்திரா மற்றும் ஒடிசாவில் ஏப்ரல் 15 வரையிலும், பீகாரில் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 17 வரையிலும் வெப்ப அலை நிலைகள் இருக்கும் என தெரிவித்துள்ளது. தற்போது, மத்திய மற்றும் வட இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலையாக 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.
2022 ஆம் ஆண்டு அளவில் செய்யப்பட்ட ஆய்வில் 2021 ஆம் ஆண்டில் உருவான மோசமான வெப்பஅலை அதாவது Heatwave மூலம் சேவை துறை, உற்பத்தி துறை, விவசாய துறை, கட்டுமான துறை சுமார் 159 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை இழந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் Heatwave மூலம் இந்தியாவின் ஜிடிபி 2.5 சதவீதம் முதல் 4.5 சதவீதம் வரையில் 2030 ஆம் ஆண்டுக்குள் பாதிக்கும் என உலக வங்கியால் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பெரும் பகுதி வெப்பம் நிறைந்த பகுதிகளாகவும், இந்தியாவில் அதிகப்படியான வர்த்தகமும், வேலைவாய்ப்பும் வெப்ப அடிப்படையாகவோ, சார்ந்து கொண்டு இருக்கும் காரணத்தால் 2030க்குள் வெப்பத்தின் காரணமாக 3.4 கோடி வேலைவாய்ப்புகள் இழக்க கூடும்.

இந்த வேலைவாய்ப்பு இழப்பு என்பது வெயிலில் அதிகம் பணியாற்றும் துறையில் இருந்து இருக்கும். மேலும் இந்த வெப்ப நிறைந்த காலக்கட்டத்தில் விவாசாய துறை அதிகம் பாதிக்கப்படும், அதிலும் குறிப்பாக விவசாய உற்பத்திகள் பாதிக்கப்படும் காரணத்தால் இந்தியாவில் உணவு பணவீக்கம் அதாவது உணவு பொருட்களின் விலைவாசி அதிகரிக்க கூடும்.
இந்த நிலையில் விவசாயத்தை அதிகம் நம்பியிருக்கும் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை அதிகம் பாதிக்கப்படும். மேலும் பால், பழம், காய்கறிகள், தானியம் என அனைத்தின் உற்பத்தியும் பாதிக்கும்.
கடைசியாக வெப்ப காலத்தில் வீட்டில் அதிகப்படியாக பேன், ஏசி பயன்படுத்தும் காரணத்தால் இந்தியா முழுவதும் மின்சார சேவை அதிகரிக்கும், இதனால் மின்சார தட்டுப்பாடு உருவாகி மின் வெட்டு வர கூட வாய்ப்புகள் உள்ளது. இதனால் மின்சார கட்டணமும் இந்த வெப்பம் நிறைந்த காலத்தில் அதிகரிக்கும்.

நடைமுறையில் வெப்பம் அதிகமாக இருக்கும் காரணத்தால் அனைத்து சேவைகளையும் மக்கள் வீட்டில் இருந்தே பெற துவங்குவார்கள், இதனால் ஆன்லைன் ஆர்டர் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் கூடுதல் செலவாகும். ஒருப்பக்கம் உணவு பணவீக்கம், மறுபுறம் மின்சார செலவுகள் என நடுத்தர மக்களின் பர்ஸ் காலியாக உள்ளது.
இதேபோல் இந்தியா முழுவதும் கட்டுமானம், விவசாயம், ரீடைல் வர்த்தகம் ஆகியவை இந்த வெப்ப அலை காலத்திலும், கோடை காலத்திலும் மந்தமடையும். இதேவேளையில் தீம் பார்க், சுற்றுலா தளங்கள், குளிர் பிரேசங்களில் வர்த்தகம் அதிகரிக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications