உலகின் மிகப்பெரிய பீர் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஹெய்னெகென் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியான டால்ஃப் வான் டென் பிரிங்க் (Dolf van den Brink) ஹெய்னெகென் நிறுவனத்தின் கேப்பிடல் மார்கெட் நிகழ்ச்சியில் பேசியபோது இந்தியாவின் குடும்ப அமைப்பு மாற்றத்தை விரிவாக விளக்கினார். இந்த மாற்றத்தின் மூலம் இந்திய குடும்பங்களுக்குள் மதுபானம் எந்த அளவுக்கு இயல்பான நுழைந்துள்ளது என்பதை குறித்தும் பேசினார்.
இவருடைய பேச்சு மதுபான சந்தையில் மட்டுமல்ல இந்திய குடும்பங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மதுபானம் குடிப்பவரின் மீதான கண்ணோட்டம் கடந்த 20 வருடத்தில் பெரிய அளவில் மாறியுள்ளதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இதேபோல் மதுபான கடைகள் எண்ணிக்கை அதிகரித்ததும் இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது.

Dolf van இந்த கூட்டத்தில் பேசிய போது, இந்திய மக்கள் பாரம்பரியமாக மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் ஒன்றாக வாழ்ந்த கூட்டுக் குடும்பங்கள், அதாவது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தப்பா, சித்தி, அக்கா, அண்ணன், தங்கை என பல தலைமுறைகள் ஒன்றாக வாழ்ந்தனர். ஆனால் கடந்த இரு தலைமுறைகளாக வேலைவாய்ப்பு, பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றின் காரணமாக கூட்டு குடும்பங்கள் உடைந்து சிறு குடும்பங்களாக மாறி வருகின்றன. இது மேற்கத்திய நாடுகளில் நீண்ட காலமாக இருக்கும் ஒரு பொதுவான குடும்ப அமைப்பை போன்றது என பேசினார்.
இந்த மாற்றம் இந்திய கூட்டு குடும்பங்களில் இருக்கும் சில மதிப்புகளை குறைத்துள்ளது, வெளிப்படை தன்மை அதிகரித்துள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக சமூக சுதந்திரத்தை அளிக்கிறது. இதன் விளைவாக, பீர் போன்ற மது பானங்கள் இளைஞர்கள் நிறைந்த குடும்ப அமைப்பில் பிரபலமடையத் தொடங்கியுள்ளன. இந்தியாவின் நகர்ப்புற வாழ்க்கை முறை மாற்றமும் இதை ஊக்குவிக்கிறது, இது பீர் நிறுவனங்களுக்கு புதிய வாடிக்கையாளர் தளத்தை உருவாக்குகிறது என பேசினார்.
இந்தியா போன்ற வெப்பமான வானிலை கொண்ட நாட்டில், அதிகப்படியான இளைஞர்கள் மக்கள் தொகை மற்றும் அதிகரிக்கும் செல்வம் ஆகியவற்றால் உலகின் மிகப்பெரிய பீர் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து வருகிறது. ஹெய்னெகென் தலைவர், இந்தியாவை உலகின் அடுத்த பெரிய பீர் சந்தை வாய்ப்பாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடுத்தர வர்க்கத்தின் விரிவாக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை பீர் அருந்தும் போக்கை அதிகரித்துள்ளது. மேலும் வீட்டிலேயே குடும்பத்திற்கு மத்தியில் பீர் அருந்தும் வழக்கம் நகர குடும்பங்களுக்கு மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்திய பீர் சந்தையில் யுனைடெட் ப்ரூவரீஸ் (யுபிஎல்) முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம், இந்திய பீர் சந்தையில் 50% பங்கை கட்டுப்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து ஏபி இன்பெவ் மற்றும் கார்ல்ஸ்பெர்க் நிறுவனங்கள் உள்ளன. யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவனம் கிங்ஃபிஷர் போன்ற பிரபல பிராண்டுகளால் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவின் பீர் நுகர்வு வளர்ச்சி, இந்த நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
ஹெய்னெகென் நிறுவனம், இந்தியாவின் மாறும் கலாச்சாரத்தை பயன்படுத்தி தங்கள் வணிகத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. நியூக்ளியர் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களின் சமூக சுதந்திரம், பீர் நுகர்வை அதிகரிக்கும் என்று நிறுவனம் நம்புகிறது. இதற்காக ஹெய்னெகென், இந்தியாவில் புதிய பிராண்டுகளை அறிமுகப்படுத்தி, சந்தை பங்கை அதிகரிக்க முயல்கிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications