பொதுவாக ஒரு கோழியின் முட்டை எடை 50 முதல் 70 கிராம் வரை இருக்கும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோழி 210 கிராம் எடை உள்ள முட்டையை இட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முட்டை தான் இந்தியாவின் மிகப்பெரிய முட்டையாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த முட்டையை இட்ட கோழி பண்ணை உரிமையாளர் இது குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
210 கிராம் முட்டை
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் என்ற பகுதியில் 210 கிராம் எடையுள்ள முட்டையை கோழி ஒன்று இட்டுள்ளதை அடுத்து இந்தியாவின் மிகப்பெரிய முட்டையாக இந்த முட்டை கருதப்படுகிறது.
சாதனை
கோலாப்பூர் மாவட்டத்திலுள்ள தல்சண்டே என்ற கிராமத்தில் கோழிப்பண்ணையை வைத்துள்ள திலீப் சவான் என்பவர் வளர்க்கும் கோழிகளில் ஒன்று தான் இந்த சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4 மஞ்சள் கருக்கள்
இந்த முட்டையில் முதல் 3 முதல் 4 மஞ்சள் கருக்கள் இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கோழிப்பண்ணையின் உரிமையாளர் திலீப் முதலில் இந்த ராட்சச முட்டையை பார்த்து ஆச்சரியமடைந்து அதன்பின் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
கோழிப்பண்ணை
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கோழி பண்ணை வைத்துள்ளேன் என்றும், என் வாழ்நாளில் இவ்வளவு பெரிய முட்டையை நான் கண்டதில்லை என்று கூறியுள்ளார். அதன் பின் அவர் அந்த முட்டையின் எடையை சோதனை செய்தபோது 210 கிராம் இருந்தது என்றும் அவர் உறுதி செய்துள்ளார்.
ராட்சத முட்டை
இந்த ராட்சத முட்டையை பார்த்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன் என்றும் கடந்த 40 ஆண்டுகளாக கோழி முட்டை வியாபாரம் செய்து வரும் எனக்கு இது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது என்றும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட்
தற்போது லிம்கா புக் ஆப் ரிக்கார்டில் இந்த முட்டை பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த முட்டையின் நீளம் 10 சென்டிமீட்டர் என்றும், 5 சென்டிமீட்டர் விட்டம் கொண்டதாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் உலகிலேயே மிகப்பெரிய முட்டையை அமெரிக்காவில் உள்ள கோழி ஒன்று இட்டுள்ளது என்றும் அந்த முட்டையின் மொத்த எடை 454 கிராம் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications