தற்போது பிறந்தநாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களை தனித்துவமான முறையில் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. அதே போல வித்தியாசமான இடங்களில் திருமணத்திற்கான ப்ரீ வெட்டிங் சூட் எனப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே காணப்படுகிறது .
இந்த சூழலில் தான் ரயில் பெட்டிகளில் பிறந்தநாள் கொண்டாடவும் ப்ரீ வெட்டிங் ஷூட்டிங் செய்வதற்கும், பல்வேறு தனிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் வாய்ப்பு தந்தால் எப்படி இருக்கும். வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். திரைப்பட நடிகர்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு இனி சாமானிய மக்களுக்கும் கிடைக்க போகிறது.

பொதுமக்கள் இனி பிறந்தநாள் கொண்டாடவும் ப்ரீ வெட்டிங் ஷூட்டிங் செய்யவும் நமோ பாரத் ரயில்களை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு மற்றும் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் , உத்திரபிரதேச மாநில அரசுகள் இணைந்து ncrtc என்ற நிறுவனத்தை உருவாக்கி இருக்கின்றன .இந்த நிறுவனம்தான் நமோ பாரத் விரைவு ரயில் சேவைகளை வழங்கி வருகிறது.
முதல் கட்டமாக 2023 ஆம் ஆண்டில் டெல்லி காசியாபாத் மீரட் வழிதடத்தில் நமோ பாரத் ரயில் சேவை தொடங்கியது. மேலும் எட்டு வழித்தடங்களில் விரைவில் நமோ பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த சூழலில் ncrtc வெளியிட்டுள்ள அறிக்கையில் நமோ பாரத் ரயில்களை மக்கள் பிறந்தநாள் மற்றும் தனிப்பட்ட விழாக்கள், திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் ஷூட், திரைப்பட படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உத்தரபிரதேசத்தின் துஹாய் நகரில் நமோ பாரத் ரயில் நிலையம் , பணிமனை அமைந்திருக்கிறது . அங்கே நமோ பாரத் ரயில் பெட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது . இந்த ரயில் பெட்டியில் முன்பதிவு செய்து கொண்டு பிறந்தநாள் விழா மற்றும் ப்ரீ வெட்டிங் ஷூட் ஆகிய படப்பிடிப்புகளையும் சினிமா படப்பிடிப்புகளையும் நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு மணி நேரத்திற்கு 5000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு விரும்பிய வகையில் ரயில் பெட்டிகளை அலங்கரித்துக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டிருக்கிறது . ஈவண்ட் பிளானர்ஸ் எனப்படும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், ஊடக நிறுவனங்கள் , புகைப்பட கலைஞர்கள் நமோ பாரத் ரயில்களை தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்காக முன் பதிவு செய்து கொள்ளலாம் .
நிகழ்ச்சிகளுக்கு அலங்காரங்கள் அல்லது உபகரணங்களை அமைக்கவும் அகற்றவும் 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவை மக்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள நமோ பாரத் ரயில் பெட்டிகளில் புகைப்படங்கள் மற்றும் ப்ரீ வெட்டிங் சூட்டிங் நடத்துவது ,பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடுவது என்பது மக்களுக்கு ஒரு தனித்துவமான பிரீமியமான அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே இந்த கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுமாம். ஓடும் ரயில்லும் பெட்டியை முன்பதிவு செய்யலாம். ஓடும் ரயிலில் நிகழ்ச்சி நடத்துபவர்கள் பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications