செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமான முறையில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இடம் பிடிக்கத் தொடங்கி விட்டது. தற்போது பள்ளி , கல்லூரிக்கு செல்பவர்கள் தொடங்கி வேலைக்கு செல்பவர்கள் வரை பலரும் அன்றாட அடிப்படையிலேயே ஏஐ செயலிகளை பரவலாக பயன்படுத்த தொடங்கி விட்டனர் .
இத்தகைய சூழலில் இந்தியாவில் சாட் ஜிபிடியை கொண்டு யுபிஐ பேமென்ட்களை மேற்கொள்ளக் கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் யுபிஐ பேமென்ட்களை நிர்வாகம் செய்து வரக்கூடிய நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ரேசர் பே ஆகிய நிறுவனங்கள் இதற்காக சாட் ஜிபிடி உரிமையாளரான ஓபன் ஏஐ நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கின்றன.

இதன் மூலம் பயனர்கள் சாட்ஜிபிடி வாயிலாக தங்களுடைய யுபிஐ பேமென்ட்களை நேரடியாக மேற்கொள்ள முடியும். எனவே இனி சாட் ஜிபிடி உங்களுக்கான ஷாப்பிங் மற்றும் பேமெண்ட் அசிஸ்டன்ட் ஆகவும் வேலை செய்யப் போகிறது. சோதனை கட்டமாக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கக்கூடிய ரேசர் பே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மாத்தூர் ஏஐ தொழில்நுட்பத்தில் அடுத்த புதுமை ஏஜென்டிக் பேமென்ட் என தெரிவித்திருக்கிறார் .
அதாவது ஏஐ கருவிகள் பயனர்களின் ஏஐ ஏஜெண்டுகள் போல செயல்படுமாம். ஏஐ வாயிலாக நாம் ஒரு பொருளை பிரவுசிங் செய்து அதனை வாங்கும் கட்டளையிட்டால் ஏஐ அதனை செய்துவிடும். நம்முடைய ஷாப்பிங் மற்றும் அதற்கான பேமெண்ட் உள்ளிட்ட அனைத்தையும் கவனித்துக் கொள்ளும் எனக் கூறுகிறார் . இதில் பெரிய அளவில் நாம் இதில் தலையிட தேவையில்லை என கூறுகிறார்.
சாட் ஜிபிடியில் குறிப்பிட்ட சில பொருட்களை பிரவுஸ் செய்யலாம் அதன் வாயிலாகவே இந்த பொருளை நான் வாங்க விரும்புகிறேன் எனக் கூறினால் அந்த பணிகளை முடித்து நமக்கான யுபிஐ பேமென்ட் செய்து கொடுத்து விடும் . ஆனால் இதற்காக உங்களுடைய யுபிஐ பின் நம்பர் அல்லது பாஸ்வேர்ட் உள்ளிட்ட விவரங்களை சாட் ஜிபிடியிடம் பகிர தேவையில்லை என கூறுகிறார். நாம் எந்த பொருள் வாங்க வேண்டும் என கூறிவிட்டால் சாட் ஜிபிடி வாங்கி விடும் பேமெண்டையும் செயல்படுத்தும் ஆனால் அதற்கு இறுதி அங்கீகாரத்தை நாம் தான் பின் நம்பர் அல்லது பாஸ்வேர்டு மூலம் கொடுக்க வேண்டும் என்கிறார்.
எனவே சாட் ஜிபிடியில் ஷாப்பிங் செய்வது யுபிஐ மூலம் பணம் செலுத்துவதால் உங்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்கிறார். வழக்கம்போல அந்த பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கு உங்களுடைய பயோமெட்ரிக் அல்லது பின் அடிப்படையிலான சரிபார்ப்பு நடைமுறைகள் கட்டாயம் இடம்பெறும் எனக் கூறியிருக்கிறார். பயனர்கள் தங்களுடைய யுபியை ஐடி அல்லது பதிவு செய்யப்பட்ட வங்கி செயலிகள் வாயிலாக அந்த பரிவர்த்தனைக்கு அனுமதி கொடுத்தால் மட்டுமே சார்ஜ் ஜிபிடி மூலம் மேற்கொள்ளப்படக்கூடிய பரிவர்த்தனைகள் முழுமை பெறும் எனக் கூறியிருக்கிறார்.
முதல் கட்டமாக ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஏர்டெல் பேமென்ட் வங்கி ஆகிய இரண்டும் இந்த சோதனை ஓட்டத்திற்கான அதிகாரப்பூர்வ வங்கி பார்ட்னர்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. பிக்பாஸ்கட் இகாமர்ஸ் தளம் இந்த சேவையை முதன் முதலில் அமல்படுத்தக்கூடிய ஒரு நிறுவனமாக மாறியிருக்கிறது. மக்களின் ஷாப்பிங்கையும் எளிதாக்க வேண்டும் அதே வேளையில் அவர்களின் பாஸ்வேர்ட் உள்ளிட்ட தரவுகளும் எங்கேயும் கசிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் கவனத்துடன் இருப்பதாக என்பிசிஐ அமைப்பு தெரிவித்திருக்கிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications