இந்தியாவை சேர்ந்த மக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் முக்கியமாக அவர்களிடம் பாஸ்போர்ட் இருக்க வேண்டும் . இந்த பாஸ்போர்ட் அத்தனை எளிதாக நமக்கு கிடைத்துவிடாது . நம்முடைய அனைத்து விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு தீவிரமாக சரிபார்க்கப்பட்ட பின்னர் தான் நமக்கான பாஸ்போர்ட்டே கிடைக்கிறது.
பல கட்ட ஆய்வுகள், சரிபார்ப்புகள் நடந்தாலும் பாஸ்போர்ட்டில் நடைபெறும் மோசடிகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரே நபரில் போலியாக பல பாஸ்போர்ட்டுகளை வைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு செல்வது என்பன உள்ளிட்ட மோசடிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த சூழலில் தான் மத்திய அரசு பாஸ்போர்ட்டில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது .

அதன் ஒரு பகுதியாக கூடிய சிப் பொருத்தப்பட்ட ஈ-பாஸ்போர்ட் அதாவது மின்னணு பாஸ்போர்ட்டுகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பாஸ்போர்ட் சேவை 2.0 எனும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு மே மாதம் முதலே சென்னை உட்பட பல்வேறு நகரங்களிலும் மின்னணு பாஸ்போர்ட்டுகளை வழங்கி வருகிறது . கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 80 லட்சம் மின்னணு பாஸ்போர்ட்டுகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த சூழலில் பாஸ்போர்ட்டுகளை மேலும் பாதுகாப்பு கொண்டதாக மாற்றக்கூடிய வகையில் இனி வழங்கப்படக்கூடிய புதிய பாஸ்போர்ட்டுகள் காகிதம் மற்றும் மின்னணு என ஒருங்கிணைந்த பாஸ்போர்ட்டாக இருக்கும். அதாவது நமக்கு வழங்கக்கூடிய பாஸ்போர்ட்டில் சிப்புகள் பொருத்தப்பட்டிருக்கும். இதுபோன்ற காகிதம் மற்றும் மின்னணு ஆகிய இரண்டு ஒருங்கிணைக்கப்பட்ட பாஸ்போர்ட்டின் முகப்பு பக்கத்தில் தங்க நிற குறியீடு கொண்டு அடையாளம் செய்யப்பட்டிருக்கும்.

Radio Frequency Identification எனப்படும் RFID சிப்புகளை பாஸ்போர்ட்டில் பொறுத்த உள்ளனர். ஏற்கனவே பழைய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் அதன் காலாவதி காலம் வரை பயன்படுத்தலாம். அதன் பிறகு அவர்களுக்கு புதிய மின்னணு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும். 2035 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் அனைத்து பாஸ்போர்ட்களையும் மின்னணு முறைக்கு மாற்ற அரசு முடிவு செய்திருக்கிறது.
இந்த பாஸ்போர்ட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் சிப்பை கொண்டே குறிப்பிட்ட அந்த நபரின் கைரேகை ,முகம் அடையாளம், கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களை சரிபார்க்கலாம்., இவை அனைத்து என்கிரிப்டட் முறையில் ரகசிய கோடு கொண்டு சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் என்பதால் யாராலும் அத்தனை எளிதாக இந்த தகவல்களை பெற்று மோசடி செய்ய முடியாது.
மேலும் நீங்கள் வெளிநாடு செல்லும் போது இமிகிரேசனில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம். இந்த சிப்பை ஸ்கேன் செய்தாலே உங்களுடைய அடையாளங்களை சரிபார்த்து அனுப்பி விடுவார்கள் . சர்வதேச விமான போக்குவரத்து தரநிலைகளுக்கு ஏற்ப இந்த புதிய பாஸ்போர்ட் திட்டத்தை அரசு கொண்டு வந்திருக்கிறது.
அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எளிதில் ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இனி விநியோகம் செய்யப்படும் பாஸ்போர்ட்டுகள் அனைத்துமே மின்னணு பாஸ்போர்ட்டாக தான் இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications