டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார வளர்ச்சி மற்றும் மிடில் கிளாஸ் மக்களுக்கு வரி சேமிப்பு என்பன உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார்.
2025 -26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களுக்கு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கியமான அறிவிப்புகள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

1. புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறையின் கீழ் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்பவர்கள் 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு புதிய வரி கணக்கு தாக்கல் நடைமுறைக்கு அனைவரும் மாற வேண்டும் என கூறி வருகிறது. அந்த வகையில் பலரும் இதில் இணைய வேண்டும் என்ற நோக்கத்தில் 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
2. வருமான வரி விகிதங்களில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களால், மத்திய அரசுக்கு நேரடி வரிகள் மூலம் 1 லட்சம் கோடி ரூபாயும் மறைமுக வரிகள் மூலம் 2600 கோடி ரூபாயும் இழப்பு ஏற்படும்.
3. ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வருமானம் கொண்டவர்கள் இந்த புதிய வரி விகிதங்களின் மூலம் இனி 1.10 லட்சம் ரூபாய் வரியை சேமிக்க முடியும். அதேபோல ஆண்டுக்கு 18 லட்சம் ரூபாய் வருமானம் கொண்டவர்கள் புதிய வரி விகிதங்களின் கீழ் ஆண்டுக்கு 70,000 ரூபாய் வரை வரி சேமிக்க முடியும்.
4. வீட்டு வாடகைக்கான வருமானம் 2.5 லட்சத்தை கடந்தால் அதற்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும், அந்த வரம்பு 6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
5. மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு வரம்பு 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
6. மொபைல் போன் பேட்டரி உற்பத்திக்கான 28 பொருட்கள் விலக்கு அளிக்கப்பட்ட மூலதன பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7. வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அரசிடம் பதிவு செய்யும் காலம் ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
8. ஆன்லைன் தளங்களில் டெலிவரி பார்ட்னர்களாக வேலையில் இருக்கும் சுமார் 1 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்காக அந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் அவர்கள் இணைக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.
9. நிலுவையில் இருக்கும் வீடு கட்டுமான திட்டங்களை முடிப்பதற்காக அரசு SWAMIH 2 என்ற ஒரு நிதியத்தை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. 15,000 கோடி ரூபாய் மதிப்பில் கொண்டு வரப்படும் இந்த நிதியமானது கூடுதலாக ஒரு லட்சம் வீட்டுப் பணிகளை முடிக்க உதவும் என்றும் , மிடில் கிளாஸ் மக்களுக்கு வீட்டு கடன் சுமை குறைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
10. குறிப்பிட்ட சில நிதி நிறுவனங்களிலிருந்து 10 லட்சம் ரூபாய் வரையிலான கல்வி கடன்களுக்கு டிசிஎஸ் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Freelancer - Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications