பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பயங்கரவாத முகாம்களை அளிப்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கான லோகோ அனைவரின் கவனத்தையும் பெற்றது. இந்த லோகோவை வடிவமைத்தது இரண்டு ராணுவ வீரர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல் காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் . நாட்டையே கொந்தளிக்க செய்த இந்த சம்பவத்தை அடுத்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு ராஜாங்க ரீதியான நெருக்கடிகளை கொடுத்தது. பின்னர் ராணுவ ரீதியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை கையில் எடுத்தது.

கடந்த மே 7ஆம் தேதி அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தவே பாகிஸ்தானுக்கு சொந்தமான விமானப்படை தளங்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது. மே 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட தாக்குதலை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்த இந்திய ராணுவம் நீதி நிலைநாட்டப்பட்டது ஜெய் ஹிந்த் என பதிவிட்டு ஆபரேஷன் சிந்தூர் என்பதே இந்த ராணுவ நடவடிக்கையின் பெயர் என பதிவிட்டிருந்தது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டதோடு மட்டுமில்லாமல் அதற்கேற்ற வகையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ஒரு லோகோவையும் ராணுவம் வெளியிட்டிருந்தது. பஹல்காம் தாக்குதல் தங்கள் கணவர்களை இழந்த பெண்களுக்கான ஆபரேஷன் சிந்தூர் என இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது.
இதற்கான லோகோவும் அதனை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. கருப்பு நிற பின்னணியில் ஆபரேஷன் சிந்தூர் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதில்0 Sindhoorஇல் வரும் ஒரு ஓவுக்கு பதிலாக ஒரு சிறிய கின்னத்தில் சிந்தூர் இருப்பது போலவும் அது ஆங்காங்கே சிதறடிக்கப்பட்டது போலவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
பஹல் காம் பயங்கரவாத தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்கள் மற்றும் அதற்கான இந்தியாவின் பதில் நடவடிக்கையும் இந்தியாவின் கோபத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த லோகா இருந்தது.இந்த லோகோவை இந்திய ராணுவத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் தான் வடிவமைத்திருக்கின்றனர். ஒருவர் லெப்டினண்ட் கர்னல் ஹர்ஷ் குப்தா மற்றொருவர் ஹவால்தர் சுரேந்தர் சிங் ஆகும்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கும் இரண்டு பெண்களே தலைமை தாங்கினர். கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இருவரும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தலைமை தாங்கி வெற்றிகரமாக பயங்கரவாத முகாம்களை அழித்தனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications