பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடி மோடில் இருக்கிறது என சொல்லலாம். கடந்த செப்டம்பர் மாதத்தில் தான் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியில் பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வந்து நாட்டையே ஆச்சரியப்படுத்தியது . இந்த சூழலில் தற்போது தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைத்து கோடிக்கணக்கான தொழிலாளர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறது.
இந்தியாவில் பல ஆண்டுகளாக 29 க்கும் அதிகமான பழைய தொழிலாளர் சட்டங்கள் செயல்பாட்டில் இருந்தன. இவை அனைத்துமே 1950 மற்றும் 1960களில் கொண்டு வரப்பட்டவை. நவீன தொழில் சூழல்களுக்கு ஏற்ப இந்த சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது . இந்த சூழலில் தான் மத்திய அரசு புதிய தொழிலாளர் சட்டங்களை நவம்பர் 21ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. இது கோடிக்கணக்கான தொழிலாளர்களின் தலையெழுத்தையே மாற்றி அமைத்துள்ளது.

குறைந்தபட்ச அடிப்படை ஊதியம்: வழக்கமாக ஆர்கனைஸ்டு செக்டார் எனப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட துறையில் மட்டும் தான் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் மற்றும் பிற பலன்கள் அனைத்தும் இது நாள் வரை கிடைத்திருந்தன. ஆனால் அது தற்போது மாற்றப்பட்டிருக்கிறது. இனி அமைப்புசாரா துறையை சேர்ந்தவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது கொண்டுவரப்படுகிறது. எனவே அனைத்து வகையான வேலைகளிலும் இனி குறைந்தபட்ச ஊதியம் என்பது ஊழியர்களுக்கு கிடைக்கும். மத்திய அரசு இந்த ஊதியத்தை நிர்ணயம் செய்யும் அதற்கு குறையாத அளவில் மாநில அரசுகளும் அடிப்படை வாழ்க்கை தரத்தை கொடுக்கும் வகையிலான குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும்.
குறித்த நேரத்தில் சம்பளம்: அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாராத என அனைத்து துறைகளிலும் குறிப்பிட்ட தேதியில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி குறிப்பிட்ட தேதியில் அனைத்து துறைகளிலும் ஊழியர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சம்பளம் கிடைத்துவிடும்.
முழு உடல் பரிசோதனை: அனைத்து நிறுவனங்களும் 40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து தர வேண்டும். ஊழியர்களின் உடல்நலனில் நிறுவனங்கள் அக்கறையோடு இருப்பதை இது உறுதி செய்கிறது.
அப்பாயின்மெண்ட் லெட்டர் கட்டாயம்: அமைப்பு சார்ந்த துறைகளில் வேலை செய்வோருக்கு அப்பாயின்மெண்ட் லெட்டர் கட்டாயம் கொடுக்கப்படும். இது வேலையை உறுதி செய்வதோடு சம்பளம் உள்ளிட்ட அனைத்தையும் கொண்ட ஒரு ஆவணமாக இருக்கும். நிறுவனங்களால் இதனை மீற முடியாது. தற்போது அமைப்பு சாரா துறைகளிலும் இந்த அப்பாயின்மெண்ட் லெட்டர் கட்டாயமாகியுள்ளது.

பெண்களுக்கு சம ஊதியம்: நிறுவனங்கள் வழக்கமாக ஒரே மாதிரியான வேலையாக இருந்தாலும் பெண்களுக்கு ஒரு சம்பளம் ஆண்களுக்கு ஒரு சம்பளம் என பாரபட்சம் காட்டுகின்றன. இனி பாலின சமத்துவத்தை பின்பற்றியாக வேண்டும், வேலைக்கு சேர்ப்பதில் தொடங்கி சம்பளம் வரை ஆண், பெண் ஊழியர்களை சமமாக நடத்துவது கட்டாயம்.
சமூக பாதுகாப்பு திட்டம்: அமைப்பு சார்ந்த துறைகளில் வேலைக்கு செல்வோருக்கு சம்பளம் மட்டுமில்லாமல் ஈஎஸ்ஐசி, பிஎஃப், காப்பீடு ஆகிய சமூக பாதுகாப்பு திட்டங்கள் கிடைக்கின்றன. ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்கள் குறிப்பாக வேகமாக உயர்ந்து வரும் கிக் பணியாளர்களுக்கும் இவை கிடைப்பதில்லை. புதிய தொழிலாளர் சட்டத்தின் படி அனைத்து தொழிலாளர்களும் ஈஎஸ்ஐசி, பிஎஃப், காப்பீடு ஆகிய சமூக பாதுகாப்பு திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு நைட் ஷிப்ட்: அனைத்து சேவை சார்ந்த துறைகளிலும் பெண்கள் நைட் ஷிப்ட் எனப்படும் இரவு நேர பணிகளில் ஈடுபடலாம். நிறுவனங்கள் அதற்கு ஏற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ல வேண்டும், பெண்கள் ஒப்புதல் உடன் தான் இரவு நேர பணி வழங்கப்பட வேண்டும்.

வீட்டில் இருந்து வேலை : வீட்டில் இருந்து வேலை செய்வதை புதிய தொழிலாளர் சட்டம் அங்கீகரித்துள்ளது. இதன்படி சேவை துறையில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும். எனவே இந்தியாவில் வீட்டில் இருந்து வேலை செய்வது என்பதும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு வேலையாக மாறி இருக்கிறது .
போராட்டம்: ஊழியர்கள் நிறுவனத்திற்கு எதிராக வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை அறிவிக்கிறார்கள் என்றால் அதற்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே முறைப்படி நோட்டீஸ் வழங்க வேண்டும். இந்த 14 நாட்கள் நோட்டீஸ் காலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது, அதேபோல நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது எனும் போது வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது .
கிக் பணியாளர்களுக்கு அங்கீகாரம்: இந்தியாவில் டெலிவரி சார்ந்த வேலைகளில் ஈடுபடுபவர்களை கிக் பணியாளர்கள் என அழைக்கிறோம் .தற்போது லட்சக்கணக்கானவர்களுக்கு இது மிகப்பெரிய ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறது. இந்த கிக் பணியாளர்களுக்கு என அரசு சமூக பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வர இருக்கிறது .எனவே இவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடிய ஸ்விக்கி , அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய வருமானத்தில் 1-2% சதவீதம் தொகையை இவர்களின் சமூக நல பாதுகாப்பு திட்டங்களுக்காக வழங்கி ஆக வேண்டும். கிக் பணியாளர்களுக்கு இனி அரசின் அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்களும் கிடைக்கும்.
ஒப்பந்த பணியாளர்கள்: நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கும் அனைத்து பணி சார்ந்த பலன்களையும் ஒப்பந்த பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மருத்துவ காப்பீட்டில் தொடங்கி கிராஜுவிட்டி வரை ஒப்பந்த பணியாளர்களும் இனி பெறுவார்கள். ஒப்பந்த பணியாளர்கள் ஓராண்டு தொடர்ச்சியாக வேலை செய்தாலே கிராஜுவிட்டி பெற தகுதி பெறுவார்கள்.
ஓவர் டைம் வேலைக்கு சம்பளம்: அனைத்து துறைகளிலும் ஊழியர்கள் ஓவர் டைம் வேலை செய்கிறார்கள் எனும் போது வழக்கமான சம்பள விகிதத்தை விட இரண்டு மடங்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் சமமான சம்பளமும் பிற சமூக பாதுகாப்பு பலன்களும் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக ரேசன் அட்டைக்கு அவர்கள் வேலை செய்யும் மாநிலங்களிலேயே பயன்படுத்தி பொருட்கள் வாங்க அனுமதிக்க வேண்டும்.
More From GoodReturns

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications