டெல்லி: பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் வாயிலாக நாம் எளிமையாக எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்முடைய ஊதியத்தில் கணிசமான தொகையானது பிஎஃப் கணக்கில் மாதம்தோறும் வரவு வைக்கப்படுகிறது. தொழிலாளர் அவருடைய ஊதியத்திலிருந்து ஒரு தொகையையும் அதற்கு நிகரான தொகையை அவருக்கு வேலை வழங்கியிருக்கும் நிறுவனமும் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கின்றன.

இவ்வாறு பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் ஓய்வு பெறும்போது ஒரு கணிசமான நிதி தொகுப்பாக பெற முடியும். இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் நமக்கு ஏதேனும் அவசர தேவைகள் ஏற்படுகிறது என்றால் நாம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தில் குறிப்பிட்ட அளவை பெற்றுக் கொள்ள முடியும்.
பொதுவாக இவ்வாறு பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை பெற வேண்டும் என்றால் அதற்கு தற்போது மிகப்பெரிய நடைமுறை இருக்கிறது. இதற்காக இபிஎஃப்ஓ தளத்தில் சென்று விண்ணப்பம் செய்து நம்முடைய வங்கி கணக்கு விபரங்கள் ,ஆதார் விபரங்கள் மற்றும் காசோலை உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனை பிஎஃப் துறை சார்ந்த அதிகாரிகள் சரிபார்த்து அனுமதி வழங்கும் பட்சத்தில் நம்முடைய வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது என்பது மிக நீண்ட செயல்முறையாக இருக்கிறது. உடனுக்குடனே உங்களுக்கு பணம் கிடைக்காது. 15 முதல் 20 நாட்கள் வரை கூட ஆகலாம். இந்த நிலையில் தான் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் எளிதாக ஏடிஎம் வாயிலாக பெறும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. இதற்கு ஏற்ற வகையில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் epfo சார்ந்த தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை மேம்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
வங்கி கணக்குகள் எப்படி செயல்படுகின்றனவோ அதற்கு நிகராக பிஎஃப் கணக்குகளையும் செயல்பாடுகளையும் மேம்படுத்தி தொழிலாளர்கள் எளிதாக பணத்தை பெற்றுக் கொள்ளும் முறை கொண்டுவரப்பட இருப்பதாக தொழில்துறை செயலாளர் சுமிதா தாவ்ரா தெரிவித்துள்ளார். இதற்காக இபிஎஃப்ஓவி-ன் ஐடி உள் கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாகவும் அடுத்த ஆண்டு இது நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
2017 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 7 கோடி ஊழியர்கள் பிஎஃப் திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு அமைப்பு இது என தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது 64 கோடி ஊழியர்கள் இருக்கும் நிலையில் அவர்கள் அனைவருக்கும் இந்த திட்டம் கைகொடுக்கும் என உறுதி அளித்துள்ளார்.
இதன்படி பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏடிஎம் அட்டை போன்ற ஒரு அட்டை வழங்கப்பட்டு விடும். அவர்கள் இதனை நேரடியாக ஏடிஎம் இயந்திரங்களில் செலுத்தி அவர்களுடைய செய்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவர்களுடைய பிஎஃப் கணக்கு இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கின் வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது. இதற்காக ஓடிபி உள்ளிட்ட பல காரணி சரிபார்ப்பு கொண்டுவரப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கூறுகிறது.
Story Written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications