ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்துவது என்பது அவ்வளவு எளிய காரியம் கிடையாது. பாராட்டு ,பழி என எதுவாக இருந்தாலும் தலைமை பொறுப்பில் இருப்பவர் தான் பொறுப்பாவார். குறிப்பாக மிகப்பெரிய தொழில் குழுமங்களை சேர்ந்த நிறுவனங்களின் தலைமை பொறுப்பை வகிப்பது மிகவும் சவால் நிறைந்தது. ஆனால் இந்த சவால்களுக்கு ஏற்ற வகையில் தான் அந்த பொறுப்புகளுக்கான ஊதியமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அதானி குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் செயல்படக்கூடிய முக்கிய தலைமை அதிகாரிகளுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
துறைமுகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ,விமான நிலையங்கள், சிமெண்ட் , ஊடகம் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது அதானி குழுமம். இதில் முக்கிய நிறுவனமாக இருப்பது அதானி என்டர்பிரைசஸ் , இது 1994 ஆம் ஆண்டு தனி நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனம் நீர் மேலாண்மை, சாலை, விமான நிலையங்கள், பாதுகாப்பு, சோலார் உற்பத்தி, டேட்டா மையங்கள் சமையல் எண்ணெய், உணவு, வேளாண் பொருட்கள் என பல்வேறு துறைகளிலும் செயல்பட்டு வருகிறது .இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரக்கூடிய வினய் பிரகாஷ் 2024 ஆம் நிதியாண்டில் 89.37 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றிருக்கிறார்.

அதானி பவர் நிறுவனத்தை பொருத்தவரை அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் 15,250 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல்மின் நிலையங்களை கர்நாடகா மகாராஷ்டிரா ,மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ,குஜராத் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் செயல் இயக்குனராக செயல்பட்டு வரும் எஸ்.பி.கையாளியா ஆண்டுக்கு 5.63 கோடி ஊதியத்தை பெறுகிறார்.
அதானி குழுமத்திற்கு பெரும் லாபமளிக்கும் நிறுவனம் அதானி போர்ட்ஸ், இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களை குத்தகைக்கு எடுத்து செயல்படுத்தி வருகிறது . இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 13 துறைமுகங்களை தன் வசம் வைத்திருக்கிறது. இதன் தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய கௌதம் அதானி 6.8 கோடி ரூபாயையும், கரண் அதானி 3.9 கோடி ரூபாயும் ஊதியமாக பெற்றுள்ளனர். அஸ்வினி குப்தா என்ற தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய மற்றொரு அதிகாரிக்கு 3 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முன்னணி வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடிய வினித் எஸ் ஜெயின் 15.25 கோடி ரூபாய் ஊதியம் பெற்றிருக்கிறார்.
அதானி குழுமத்தை சேர்ந்த எஃப்எம்சிஜி நிறுவனமான அதானி வில்மர் அரிசி ,பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், கோதுமை மாவு, சர்க்கரை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரக்கூடிய அங்குஸ் மலிக் 5. 15 கோடி ரூபாயை ஊதியமாக பெற்று இருக்கிறார்.
அம்புஜா சிமென்ட்ஸ் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரக்கூடிய அஜய் கபூர் 9. 34 கோடியை ஊதியமாக பெற்று இருக்கிறார். அதானி குடும்பத்திற்கு சொந்தமான ஊடக நிறுவனம் என்டிடிவி-இன் தலைமை செயல் அதிகாரியாக அண்மையில் செந்தில் செங்கல்வராயன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் இவருக்கு ஆண்டுக்கு 2.39 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications