வாஷிங்டன், அமெரிக்கா : அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் டொனால்ட் டிரம்புக்கு உலகின் முன்னணி தொழிலதிபரும் பல்வேறு சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரக்கூடிய பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டில் உலகமே எதிர்பார்த்த ஒரு தேர்தல் அமெரிக்க அதிபர் தேர்தல். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் டிரம்பும் போட்டியிட்டனர்.
இதில் எலான் மஸ்க் உள்ளிட்டவர்கள் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தனர். கோடிக்கணக்கிலான தொகையை நிதியாக வழங்கினர். அதே வேளையில் பில்கேட்ஸ் உள்ளிட்டோர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்தனர். இருந்தாலும் தேர்தல் முடிவுகள் டொனால்ட் டிரம்புக்கு பெரும்பான்மையை தந்துள்ளது.

வரும் ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவி ஏற்க இருக்கிறார். அவருக்கு பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் முன்னணி தொழிலதிபரும் சமூக நலன் சார்ந்த செயல்களுக்கு பெயர் போனவருமான பில்கேட்ஸ் தன்னுடைய சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் வான்ஸ் ஆகிய இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்க குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக எதிர்காலத்தில் உங்களோடு இணைந்து செயல்பட விரும்புகிறேன் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த புத்திசாலித்தனத்தையும் புதுமைகளையும் பயன்படுத்தும் போது அமெரிக்கா வலிமையான நாடாக மாறும் என தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டி இருக்கும் பில்கேட்ஸ் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாம் இணைந்து செயல்படுவோம் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி அடிப்படையில் , கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்த ஒரு நிறுவனத்திற்கு பில்கேட்ஸ் 50 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கினார் என தெரிவித்திருந்தது. மேலும் பில்கேட்ஸின் முன்னாள் மனைவி வெளிப்படையாகவே கமலா ஹாரிஸை ஆதரித்திருந்தார்.
கமலா ஹாரிஸ்தான் பொருத்தமான வேட்பாளர் என்றும் கூறியிருந்தார். பில்கேட்ஸ் மட்டுமில்லாமல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லாவும் டொனால்ட் டிரம்புக்கு வரலாறு காணாத வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்துகள் அதிபர் டிரம்ப், உங்களோடு இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என சத்ய நாதெல்லா கூறியுள்ளார். அதேபோல அமெரிக்கா மற்றும் உலகத்திற்கு புதிய வளர்ச்சிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்கக்கூடிய பணிகளை நாம் ஒன்றாக மேற்கொள்வோம் என சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸும் டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 45 ஆவது மற்றும் 47வது அதிபரான டொனால்ட் டிரம்புக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் என ஜெஃப் பெசோஸ்.
அதேபோல பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க், உங்களோடும் உங்களுடைய நிர்வாகத்தோடும் இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருக்கிறோம் வாழ்த்துக்கள் அதிபர் டிரம்ப் எனக் கூறியுள்ளார்.
கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தன்னுடைய எக்ஸ் பக்கத்தின் வாயிலாக டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் வரலாறு காணாத வெற்றிக்கு உங்களை நான் வாழ்த்துகிறேன், அமெரிக்காவின் புதுமையான கண்டுபிடிப்புகளின் பொற்காலம் இது இப்படிப்பட்ட ஒரு பொற்காலத்தில் அனைவருக்கும் நன்மை பயக்கும் திட்டங்களில் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications