இன்று பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரும்பாலும் இது போன்ற முதலீடுகள் செய்யும்போது பணத்தை முழுவதுமாக ஒரே இடத்தில் முதலீடு செய்து விடக்கூடாது , பன்முகப்படுத்த வேண்டும் என முதலீடு துறை சார்ந்த நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.
இது ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கும் பொருந்தும். ஏனெனில் பெரும்பாலும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் என்றாலே நம் அனைவருக்கும் தெரிந்தது வீடு சார்ந்த முதலீடு அல்லது கடைகள் சார்ந்த முதலீடு. இந்த வீடு சார்ந்த முதலீட்டில் வீடுகள் ,அடுக்குமாடி குடியிருப்புகள், வீட்டு மனைகள் ஆகியவை வந்து விடுகின்றன.

ஒருவேளை உங்களுக்கு ஏற்கனவே சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது வேறு வகையான முதலீடுகளை நீங்கள் ஆராய்ந்து வருகிறீர்கள் என்றால் உங்களிடம் போதுமான ஒரு பட்ஜெட் இருக்கிறது என்றால் கண்டிப்பாக கடைகளில் முதலீடு செய்வது குறித்து யோசிக்கலாம்.
ஆனால் அண்மைக்காலமாக விவசாய நிலத்தை வாங்குவதற்கு இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. விவசாய நிலங்களின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும் தற்போது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் விவசாய நிலங்களில் முதலீடு செய்வது ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு விவசாய நிலங்களில் முதலீடு செய்பவர்கள் முதலில் அந்த நிலம் எந்த ஒரு சட்ட சிக்கலும் இல்லாமல் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து தெரிந்து கொள்வது அவசியம்.
உங்களிடம் அந்த நிலத்தை விற்பனை செய்பவருக்கு அந்த நிலம் எப்படி வந்தது, பரம்பரை சொத்தாக வந்ததா அல்லது வேறு யாரிடமும் அவர் வாங்கி தற்போது விற்பனை செய்கிறாரா என்பன உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்வது நல்லது. அந்தந்த மாநில அரசு இணையதளங்களிலேயே குறிப்பிட்ட நிலம் சார்ந்த சர்வே எண்களை உள்ளீடு செய்தாலே அனைத்து தகவலும் கிடைத்து விடும். மேலும் அந்த குறிப்பிட்ட பகுதியில் வெளியாக கூடிய செய்தித்தாள்களில் குறிப்பிட்ட நிலத்தை வாங்கப் போவது குறித்து விளம்பரம் செய்வது கூட சிறந்ததாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
எந்த சட்ட சிக்கலும் இல்லை என்றால் உடனடியாக நிலத்தை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குவது நல்லது என்கின்றனர் இந்த துறையை செய்தவர்கள். ஒருவேளை நீங்கள் விவசாய நிலத்தை வாங்கி அங்கே வீடு கட்ட வேண்டும் என நினைக்கிறீர்கள் என்றால் அதற்கு உள்ளூர் நிர்வாகத்தில் உங்களுக்கு அனுமதி கிடைக்குமா என்பது குறித்து முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நிலம் வீடு கட்டுவதற்கான அனுமதி பெற்ற நிலமா என்பதை பார்க்க வேண்டும்.
அந்த நிலம் அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அங்கே சின்னதாக ஒரு ஹால் அல்லது மோட்டல் உள்ளிட்டவற்றை அமைப்பது குறித்து திட்டமிடலாம். சிறிதாக ஃபார்ம் ஹவுஸ் கட்டி வார விடுமுறை நாட்களில் வாடகைக்கு விடலாம். சுற்றுலா தளத்திற்கு அருகிலேயே இருக்கக்கூடிய இடம் என்றால் அதனை சாதகமாக பயன்படுத்தி வாடகை வருமானம் பார்க்கலாம் என்கின்றனர் முதலீட்டு நிபுணர்கள்.
விவசாய நிலத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் விவசாயத்தில் தான் ஈடுபட வேண்டும் என்று அவசியமில்லை. தற்போது டிமாண்டில் இருக்கக்கூடிய பயிர்களை அங்கே சாகுபடி செய்யலாம் அல்லது மருத்துவத் துறைக்கு பயன்படும் தாவரங்களை பயிரிடலாம்.
பொதுவாக விவசாய நடவடிக்கைகள் மூலம் கிடைத்த வருமானம் மற்றும் விவசாய நிலத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானம் ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படுவது கிடையாது. எனவே நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் பங்குச்சந்தைகளை தாண்டி இது போன்ற விவசாய நிலங்களையும் ஒரு வாய்ப்பாக பார்க்கலாம்.
Written by: Devika
More From GoodReturns

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications