டாடா, அம்பானி, அதானி முதலில் என்ன தொழில் செஞ்சாங்க தெரியுமா? கேட்டா நீங்களே ஆச்சரியப்படுவீங்க?

இந்தியாவில் தொழிலதிபர்கள் என்ற உடனே நம் நினைவுக்கு வருவது டாடா ,அம்பானி, அதானி உள்ளிட்டோர் தான். இவர்கள் அனைவருமே சிறிய அளவில் ஒரு தொழிலை தொடங்கி பின்னர் அதனை பல்வேறு துறைகளுக்கும் விரிவாக்கம் செய்து இந்தியாவின் அசைக்க முடியாத தொழிலதிபர்களாகவும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்தவர்களாகவும் உயர்ந்துள்ளனர். முதன் முதலில் இவர்கள் எந்த தொழிலை செய்ய தொடங்கினார்கள் என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

கௌதம் அதானி: அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி முதன்முதலில் 1988 ஆம் ஆண்டு பிவிசி இறக்குமதி தொழிலில் தான் ஈடுபட்டார். இதனை அடுத்து எரிசக்தி துறை, விமான நிலையங்கள் கட்டமைப்பு மற்றும் மேலாண்மை, உள்கட்டமைப்பு துறை, மின்சார உற்பத்தி என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து தற்போது இந்தியாவின் அசைக்க முடியாத ஒரு தொழிலதிபராக உருவெடுத்து இருக்கிறார்.

டாடா, அம்பானி, அதானி முதலில் என்ன தொழில் செஞ்சாங்க தெரியுமா? கேட்டா நீங்களே ஆச்சரியப்படுவீங்க?

முகேஷ் அம்பானி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் நம்பர் ஒன் தொழில் குழுமமாக இருந்து வருகிறது. முதன் முதலில் ஆடை உற்பத்தியில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் கால் பதித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக தற்போது இருக்கக்கூடிய முகேஷ் அம்பானியின் தந்தையான திருபாய் அம்பானி 1980களில் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் யூனிட் என்ற பெயரில் தொழிலை தொடங்கினார். பின்னாளில் இவர் தொலைதொடர்பு துறை மற்றும் சில்லறை விற்பனை , பெட்ரோ கெமிக்கல் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து, தற்போது அம்பானி குடும்பம் தொழில் புரியாத துறையே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளது.

ரத்தன் டாடா: டாடா குழுமத்தின் தலைவராக செயல்பட்டு வந்தவர் தான் ரத்தன் டாடா. கடந்த ஆண்டு இவர் காலமானார். டாடா குடும்பத்தை பொறுத்தவரை பாரம்பரியமாகவே தொழில் தொழிலில் தான் ஈடுபட்டு வருகிறது. முதன் முதலில் இவர்கள் ஸ்டீல் உற்பத்தியில் தான் கால் பதித்தனர். டாடா ஸ்டீல் நிறுவனம் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் ஐடி, விமான போக்குவரத்து, சில்லறை வணிகம் , வாகன உற்பத்தி என பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமாக டாடா குழுமம் உருவாகி இருக்கிறது. ரத்தன் டாடா முதன் முதலில் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மேலாளராக பணிக்கு சேர்ந்தவர். பின்னர் படிப்படியாக முன்னேறி டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார் .

நாராயண மூர்த்தி: இன்போசிஸ் நிறுவனம் இந்தியாவின் பிரதான ஐடி சேவை நிறுவனமாக இயங்கி வருகிறது. முதன் முதலில் 1981 ஆம் ஆண்டு நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் நண்பர்களுடன் இணைந்து 10,000 ரூபாய் கடனில் தான் இன்போசிஸ் நிறுவனத்தை தொடங்கினர். ஒரு சிறிய ஐடி சேவை நிறுவனமாக தொடங்கப்பட்ட இன்போசிஸ் தற்போது சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஐடி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

சிவநாடார்: ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவ நாடார் 1976 ஆம் ஆண்டு மைக்ரோ பிராசஸர்களை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை தான் முதலில் தொடங்கினார். பின்னர் ஐடி துறையில் கால் பதித்த அவர் ஹெச்சிஎல் டெக்னாலஜியை மிகப்பெரிய நிறுவனமாக வளர்த்துள்ளார்.

நிகில் காமத்: இந்தியாவின் இளம் தொழில் அதிபர்களில் ஒருவராக இவர் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய 17 ஆவது வயதில் பங்கு வர்த்தகராக தொழிலை தொடங்கியவர் தான் நிகில் காமத். தற்போது ஸெரோதா என்ற செயலியை உருவாக்கி சாதாரண மக்களும் பங்கு சந்தையில் வர்த்தகம் செய்வதை எளிமைப்படுத்தி இருக்கிறார். இந்தியாவின் இளம் கோடீஸ்வரராக மட்டும் இல்லாமல் பல்வேறு ஸ்டார்ட் அப்களிலும் முதலீடு செய்துள்ளார்.

Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+