ஆதார் கார்டுல உங்க போட்டா நல்லா இல்லையா? இந்த ஸ்டெப்ஸ ஃபாலோ பண்ணி ஈஸியா மாத்தலாம்..!

ஆதார் அட்டை நமது முக்கியமான அடையாள ஆவணமாகும். இந்தியாவில் பெரும்பாலான சேவைகளுக்கு ஆதார் தான் ஆவணமாக கேட்கப்படுகிறது. ஆதார் அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் உள்ளிட்டவற்றை நாம் எளிதாக செய்து கொள்ள முடியும்.

பெரும்பாலானவர்களுக்கு ஆதார் அட்டையில் நமது புகைப்படம் நன்றாக இல்லை என்ற உணர்வு இருக்கும். அப்படி உங்களுக்கும் தோன்றியிருந்தால் இந்த வழிமுறைகளை பின்பற்றி எளிதாக போட்டோவை மாற்றிக் கொள்ளுங்கள்.

ஆதார் கார்டுல உங்க போட்டா நல்லா இல்லையா? இந்த ஸ்டெப்ஸ ஃபாலோ பண்ணி ஈஸியா மாத்தலாம்..!

முதலில் UIDAIவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/en/ க்கு செல்ல வேண்டும்
இதில் Aadhaar enrolment படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும்
படிவத்தில் கேட்கப்படும் அனைத்து தகவல்களையும் நிரப்பி பூர்த்தி செய்ய வேண்டும்
உங்களுக்கு அருகில் இருக்கும் ஆதார் சேவை மையத்திற்கு இந்த படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்
அங்கே உங்களது fingerprint உள்ளிட்டவை சேகரிக்கப்படும்
இதனை அடுத்து ஆதார் சேவை மையத்தில் இருப்பவர்கள் உங்களின் படத்தை எடுப்பார்கள்.

இந்த நடைமுறை முடிந்த பின்னர் உங்களுக்கு acknowledgment slip வழங்கப்படும். அதில் உள்ள Update Request Number (URN) எண்ணை வைத்து போட்டோ அப்டேட் ஆனதா என்பதை UIDAI தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

ஆதாரில் போட்டோவை அப்டேட் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களும் இருக்கின்றன. அவை:

உங்களின் ஆதார் அட்டையில் புகைப்படத்தை அப்டேட் செய்வதற்கு எந்த ஒரு துணை ஆவணமும் தேவையில்லை
ஆதார் சேவை மையத்திலேயே நேரடியாகவே புகைப்படம் எடுக்கப்படும் என்பதால் நீங்கள் போட்டோ எதுவும் கையில் எடுத்து செல்ல வேண்டியதில்லை
உங்கள் போட்டோ அப்டேட் செய்யப்படுவதற்கு அதிகபட்சமாக 90 நாட்கள் வரை கூட ஆகலாம்.
ஆதாரில் சில குறிப்பிட்ட மாற்றங்களை மக்கள் தாங்களாகவே Self-Service Update Portal மூலம் செய்து கொள்ளலாம். ஆனால் போட்டொ அப்டேட் செய்வதற்கு ஆதார் சேவை மையத்திற்கு தான் நேரடியாக செல்ல வேண்டும்.

ஆதார் கார்டில் உங்களது போட்டோ அப்டேட் ஆனதை உறுதி செய்த பின் நீங்கள் UIDAI தளத்தில் புதிய ஆதார் அட்டையை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கு UIDAIஇன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் "My Aadhaar" பிரிவுக்கு சென்று "Download Aadhaar" என்பதை கிளிக் செய்ய வேண்டும்
அதில் ஆதார் எண் மற்றும் captcha codeஐ உள்ளீடு செய்ய வேண்டும்
பின்னர் "Send OTP" என்பதை தேர்வு செய்ய வேண்டும்
ஆதாருடன் நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பி வைக்கப்படும்.
OTPஐ உள்ளீடு செய்து லாகின் செய்ய வேண்டும்
அதில் "Download Aadhaar" என்பதை கிளிக் செய்து ஆதாரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் கடைக்கு சென்று அதனை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

Story Written by: Devika

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+