டெல்லி: 2025 -26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் மூலம் பல்வேறு பொருட்களின் விலை குறைய போகிறது, பல்வேறு பொருட்களின் விலை உயரப்போகிறது .அவை என்னென்ன என்பதை நாம் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வது மற்றும் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய மிடில் கிளாஸ் மக்களின் செலவு செய்யும் சக்தியை அதிகரிப்பது ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயார் செய்யப்பட்டிருக்கிறது என அவர் கூறினார்.

செல்போன்கள், புற்றுநோய் மருந்துகள் மற்றும் குறிப்பிட்ட சில மினரல்கள் உள்ளிட்டவற்றுக்கான இறக்குமதி வரியை குறைத்து இருக்கிறார். அதே வேளையில் குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை உயர்த்தியுள்ளார்.
விலை குறைய போகும் பொருட்கள் என்னென்ன?:
· செல்போன்களுக்கான பேட்டரி உற்பத்தியில் பயன்படுத்தப்படக்கூடிய 28 பொருட்கள் விலக்கு அளிக்கப்பட்ட மூலதன பொருட்கள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக செல்போன்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
· இறக்குமதி வரி முழுவதுமாக நீக்கம் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் 36 மருந்துகள் சேர்க்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதில் புற்றுநோய் சிகிச்சைக்கான சில மருந்துகளும் அடங்கும்.
· மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் இயான் பேட்டரிகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் மின்சார வாகனங்களின் விலை குறையும்.
· உறைய வைக்கப்பட்ட மீன் பேஸ்ட்டுகள் மீதான வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
· வெட் ப்ளூ லெதர் பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. எனவே தோல் சம்பந்தப்பட்ட பொருட்கள் விலை குறையும்.
· எல்சிடி மற்றும் எல்இடி டிவிக்களுக்கான ஓபன் செல்கள் விலை குறைய இருக்கிறது.
· கப்பல் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
· அதேபோல கடல் சார்ந்த பொருட்கள் மற்றும் கோபால்ட் பொருட்கள் விலை குறையும்.
விலை உயரும் பொருட்கள்:
· பிளாட் பேனல் டிஸ்ப்ளே விலை உயரப் போகிறது. கம்ப்யூட்டர் திரைகள் மற்றும் டிவிக்களில் பயன்படுத்தப்படும் இந்த மெல்லிய பேனல் டிஸ்ப்ளே விலை உயரப்போகிறது. எனவே டிவிகளின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது.
· பின்னப்பட்ட துணிகளின் விலை உயர இருக்கிறது. எனவே இந்த வகை துணிகளை நாம் வெளிநாடுகளிலிருந்து வாங்கும்போது அவற்றின் விலை இனி அதிகமாக இருக்கும்.
freelancer - Devika


Click it and Unblock the Notifications