பணக்காரர்கள் என்றாலே அவர்களது தொழில் ரீதியான வாழ்க்கைக்கு நிகராக அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் தலைப்புச் செய்திகள் ஆகி விடுகின்றன. சில பணக்காரர்கள் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட குடும்ப ரீதியாகவும் வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணைவிகள் குறித்து இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
நீதா அம்பானி: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியின் மனைவி தான் இவர். முகேஷ் அம்பானி 115 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்ட ஒரு நபர். இவரது தொழிலிலும் இவரது நிறுவன அறக்கட்டளை சார்ந்த பணிகளிலும் நீதா அம்பானி முக்கிய பங்கு வகிக்கிறார்.

லாரன் சான்செஸ்: ஒரு திறமையான செய்தியாளராக இருந்தவர். இவர் 192 பில்லியன் டாலர்கள் கொண்ட உலகின் இரண்டாவது பணக்காரரான ஜெப் பெசோஸின் மனைவியாவார். இவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.
ஹெலன் மெர்சியர்: எல்விஎம்ஹச் உரிமையாளரும் 191 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சொந்தக்காரருமான அர்னால்டு பெர்னாடின் மனைவிதான் இவர். கனடாவின் புகழ் பெற்ற பியானோ கலைஞர் . 1991இல் இவர்களது திருமணம் நடைபெற்றது அன்று முதல் இவர் பெர்னாடின் வாழ்வின் முக்கிய நபராக இருந்து வருகிறார்.
பிரிஸ்ஸிலா சான்: பேஸ்புக் நிறுவனறும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஸக்கர்பர்க்கின் மனைவிதான் இவர். ஊட்டச்சத்து நிபுணரான இவர் மார்க்கின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார். தற்போது மார்க் உலகின் நான்காவது பணக்காரராக இருக்கிறார். இவர்கள் சொத்து மதிப்பு 179.8 பில்லியன் டாலர்கள் ஆகும்.
நிகிதா கான்: ஒராக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனரான லாரி எலிசனின் மனைவிதான் இவர். லாரி எலிசன் 171.5 அமெரிக்க டாலர்களுடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். நிகிதா கான் திரைப்பட தயாரிப்பாளராகவும் நடிகையாகவும் இருக்கிறார் . நிகிதா கான் லாரி எலிசனை விட 47 வயது இளையவர் ஆவார்.
ஆஸ்டிரிட் மென்க்ஸ் : உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் மனைவிதான் ஆஸ்டிரிட் மென்க்ஸ். இவர் 144.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டவர்.
லுசிந்தா சவுத்வொர்த்: கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான லாரி பேஜின் மனைவிதான் இவர் . லாரி பேஜ் 137.1 மில்லியன் அமெரிக்க டாலருடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறார்.
லோரி ஹூவாங்: என்விடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜென்சன் ஹூவாங்கின் மனைவி இவர். ஜென்சன் ஹூவாங் 110 மில்லியன் டாலர்களோடு உலக பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்தில் இருக்கிறார் . இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்களாக இருந்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
மிராண்டா கேர்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாடலான இவர் snapchat நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஈவன் ஸ்பீகலின் மனைவியாவார். விக்டோரியா சீக்ரெட் நிறுவனத்தின் முதல் மாடல் என பெருமை பெற்றவர் தான் மிராண்டா கேர்.
சல்மா ஹயேக்: கெரிங் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பிராங்க்கோயிஸ் ஹென்றி ஃபினால்டின் மனைவிதான் சல்மா ஹயேக். இவர் ஒரு ஹாலிவுட் நடிகை ஆவார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications