டெல்லி: இந்தியாவில் விமானங்களில் பறக்கும் போது இனி வைஃபை வசதிகளை பயன்படுத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக இந்தியாவிற்கு சொந்தமான விமான எல்லையில் பயணம் செய்யும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் வைஃபை சேவைகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவிலான விமான சேவை தரத்தை இந்திய விமான போக்குவரத்து துறை எப்படியுள்ளது.
பொதுவாக இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்யும்போது நமது செல்போன்களில் இணைய இணைப்புகள் கிடைக்காது. இந்த நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இந்திய விமான எல்லையில் பயணம் செய்யும்போது தடையற்ற இணைய வசதியை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் இந்த இன் ஃப்ளைட் வைஃபை (inflight wifi)வசதி நடைமுறையில் இருக்கிறது. இதன் மூலம் விமான பயணிகள் வைஃபை பயன்படுத்தி உலகத்தோடு தொடர்பில் இருக்கலாம்.

அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்ஃப்ளைட் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முதன்முறையாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தான் ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் இணைய வசதியை வழங்கியது .அதன் பிறகு அமெரிக்காவில் இயங்கக்கூடிய பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் வைஃபை சேவைகளை வழங்க தொடங்கின. 2010 ஆம் ஆண்டிலேயே டெல்டா, யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய விமானங்களில் வைஃபை பயன்படுத்தும் வாய்ப்புகளை வழங்கின.
ஐரோப்பிய நாடுகளில் செயல்படக்கூடிய விமானங்களில் 2011 ஆம் ஆண்டு முதல் வைஃபை சேவை அனுமதிக்கப்பட்டது முதன் முதலில் பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுஃப்தான்சா ஆகிய நிறுவனங்களில் வைஃபை சேவைகள் வழங்கப்பட்டன . பின்னர் ஐரோப்பிய கண்டம் முழுவதும் அனைத்து நாடுகளும் வைஃபை சேவைகளை வழங்க அனுமதித்தன.
மத்திய கிழக்கு நாடுகளில் 2011 ஆம் ஆண்டு முதல் விமானங்களில் இன் ஃப்ளைட் வைஃபை சேவைகள் வழங்கப்பட்டன. கத்தார் ஏர்வேஸ், எத்தியாட் நிறுவனங்கள் தான் தொடக்கத்தில் தங்களுடைய விமானங்களில் வைஃபை சேவைகளை வழங்கத் தொடங்கின. முதலில் இது ப்ரீமியம் பயணிகளுக்கு வழங்கப்பட்டு பின்னர் அனைத்து பயணிகளுக்கும் என விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆசிய பசிபிக் நாடுகளை பொருத்தவரை ஜப்பான் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கேதே பசிபிக் ஆகிய நிறுவனங்கள் 2013 ஆம் ஆண்டிலேயே வைஃபை சேவைகளை வழங்க தொடங்கி விட்டன. ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் செயல்படக்கூடிய ஏர் நியூசிலாந்து உள்ளிட்ட நிறுவனங்கள் 2017 ஆம் ஆண்டிலிருந்து வைஃபை சேவைகளை வழங்கி வருகின்றன. தற்போது இந்தியாவும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.ஏர் இந்தியா, இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் விமானங்களில் வைஃபை சேவை வழங்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
Written by: Devika
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications