யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வது என்பது இந்தியாவில் மிக எளிமையானதாக மாறிவிட்டது. ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும் அதில் யுபிஐ செயலிகள் இருந்தாலே போதும் நாம் நம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மற்றவரின் வங்கி கணத்திற்கு மாற்றி விட முடியும்.
நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரான சஞ்சய் மல்கோத்ரா மும்பையில் நடைபெற்று வரும் குளோபல் ஃபின்டெக் திருவிழாவில் யுபிஐ பணப்பரிவர்த்தனையை எளிமையாக்கும் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறார் இது ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேலும் எளிமையானதாக மாற்ற இருக்கிறது.

அதாவது மொபைல் போன் மட்டும் இல்லாமல் கார்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்சுகளை பயன்படுத்தியும் இனி நாம் எளிதாக யுபிஐ பேமென்ட்களை மேற்கொள்ள முடியும் என்பன உள்ளிட்ட பல வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஏஐ யுபிஐ உதவி: யுபிஐ செயலிகளில் ஏஐ மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை ஒருங்கிணைக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் இந்த வசதி விரைவில் அனைத்து இந்திய மொழிகளிலும் பயன்பாட்டுக்கு வந்துவிடும் . இதன்படி உங்களுடைய பரிவர்த்தனையின் ஸ்டேட்டஸ் என்ன, அது தொடர்பாக புகார் அளிப்பது, புகாரின் நிலை என்ன உள்ளிட்டவற்றை நாம் எளிதாக கண்டறிய முடியும். வாடிக்கையாளர்களுக்கு ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டியாகவும் செயல்படும், விரைவில் இது நம் யுபிஐ செயலிகளில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
ஸ்மார்ட் வாட்ச்சில் யுபிஐ: தற்போது நாம் நம்முடைய மொபைல் போனை கொண்டு தான் யுபிஐ பேமென்ட்களை மேற்கொள்கிறோம் . ஆனால் கூடிய விரைவில் இன்டர்நெட் ஆப் திங்ஸ் எனப்படும் செயலிகள் வாயிலாகவும் நாம் யுபிஐ பேமெண்ட்களை மேற்கொள்ள முடியும், அதாவது ஸ்மார்ட் வாட்ச் ,ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் டிவி , கனெக்டட் கார் ஆகியவற்றை கொண்டும் யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியுமாம். ஒவ்வொரு முறையும் நம் போனை எடுக்க வேண்டிய தேவையில்லை. இந்த வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
யுபிஐ ரிசர்வ் : அடிக்கடி ஆன்லைன் வாயிலாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்பவர்கள் , உணவு ஆர்டர் செய்பவர்கள் , கேப் புக்கிங் செய்பவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு முறையும் உங்களுடைய கார்டு விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது . ஒரு முறை உள்ளிட்டு ரிசர்வ் செய்து கொண்டாலே பல முறை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications