மத்தியில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியின் தயவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது முதலே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் கணிசமான வளர்ச்சியை கண்டு வருகின்றன. குறிப்பாக சந்திரபாபு நாயுடுவுக்கு மிக நெருக்கமான ஒரு நிறுவனத்தின் பங்கு தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு பின்னர் 75% வளர்ச்சியை கண்டுள்ளது.
ஹெரிடேஜ் புட்ஸ் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினர் பங்குகளை வைத்திருக்கக்கூடிய பால் பொருட்கள் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன்படி 2025 ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் மட்டும் ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் லாபம் 584.28 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட இது 5 மடங்கு அதிகம், 250 சதவிகிதம் உயர்வு ஆகும்.

ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் வருமானம் 10,326 கோடி ரூபாய் என வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் இருந்து கிடைத்த வருமானம் 10,194 கோடி ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது 9 ஆயிரம் கோடியாக இருந்தது. சந்திரபாபு நாயுடுவின் குடும்பம் ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தில் 35.7 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது. அதாவது 3.31 கோடி பங்குகள் ஆகும்.
இதில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் மட்டும் 10.82 சதவிகித பங்குகளை தனது பெயரில் வைத்திருக்கிறார். அவரது மனைவி புவனேஸ்வரி 24 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார்.
கடந்த மூன்று மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 75 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதுவே கடந்த ஆறு மாத காலத்தில் 83.61 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு 114 சதவிகிதம் உயர்ந்துள்ளது என மும்பை பங்கு சந்தை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தான் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளது.
இந்த நிறுவனம் தங்களது பங்குதாரர்களுக்கு 5 ரூபாய் ஃபேஸ்வேல்யூ கொண்ட ஒரு பங்குக்கு 2.50 ரூபாய் ஈவு தொகையாக வழங்குவது என அறிவித்துள்ளது. ஜூலை 24ஆம் தேதி பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 640 ரூபாய் என வர்த்தகமானது. நேற்று பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு சாதகமான அறிவிப்பு வெளியான போது இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5% உயர்ந்து அப்பர் சர்கியூட் நிலைக்கு சென்றது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications