உண்மையில வாகன நிறுவனங்களுக்கு கடந்த விழாக்கால பருவம் என்பது ஒரு ஜாக்பாட் தான். ஏனெனில் கொரோனாவால் முடங்கிபோன நிறுவனங்களுக்கு, இது ஒரு பெருத்த தீனி என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் கொரோனாவை தடுக்கும் பொருட்டு, நாடு முழுவதும் கடந்த மார்ச் இறுதியில் லாக்டவுன் செய்யப்பட்டது. இதன் காரணமாக சில மாதங்களில் வாகன நிறுவனங்கள ஒரு வாகனத்தினை கூட விற்பனை செய்யவில்லை. அப்படி இக்கட்டான நிலையில் இருந்து வந்தன.
அப்படி இருந்த நிறுவனங்களுக்கு உண்மையில் இந்த விழாக்கால பருவம் நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். ஏனெனில் பல நிறுவனங்களும் சாதகமான அறிக்கைகளையே கொடுத்து வருகின்றன.
10ல் 9 நிறுவனங்கள் சீனா.. அப்போ இந்தியா..?!

எவ்வளவு வாகன விற்பனை?
குறிப்பாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்த விழாக்கால பருவத்தில் 14 லட்சம் இரு சக்கர வாகனங்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விழாக்கால பருவமாக அக்டோபர் 17 அன்று ஆரம்பித்த நவராத்திரி முதல் கொண்டு நவம்பர் 16 வரை கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவிள்ளது.

விழாக்கால விற்பனை
இந்த நிறுவனம் சில்லறை வணிகத்தில், மேற்குறிப்பிட்ட இடைக்காலத்தில் நடந்த விற்பனையானது, கடந்த ஆண்டில் விற்பனையில் 98%மும், இதே கடந்த 2018ம் ஆண்டில் நடந்த விற்பனையில் 103%க்கும் சமமானது என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விழாக்கால விற்பனை டீலர்களின் இருப்பை குறைக்க உதவியதாகவும், இது பண்டிகைக்கு பிந்தைய மிகக்குறைந்த இருப்பு என்றும் இந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

செம விற்பனை
அதோடு ஹீரோ நிறுவனம் இந்த விழாக்கால விற்பனையில் 100 சிசி உடைய ஸ்பிளண்டர், ஹெச் எஃப் டீலக்ஸ் மாடல்ஸ், 125 சிசி கொட கிளாமர், சூப்பர் ஸ்பிளண்டர் வகை வாகனங்கள் விற்பனையில் களைகட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு எக்ஸ்ட்ரீம் 160 ஆர், எக்ஸ்பல்ஸ் போன்ற மாதிரிகள் பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிரிவில் விற்பனையை அதிகரிக்க உதவியதாகவும் ஹீரோ தெரிவித்துள்ளது.

ஸ்கூட்டர் மாடல்கள் இரு இலக்க வளார்ச்சி
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், ஸ்கூட்டர் ரக மாடல்களான 110cc Pleasure and 125cc Destini வாகனங்கள் இரு இலக்க வளர்ச்சியினை பதிவு செய்தன. வலுவான பண்டிகை காரணமான அக்டோபரில் அதன் சந்தை பங்கு 5 சதவீத புள்ளிகளுக்கு மேல் அதிகரித்துள்ளது என்றும் இந்த நிறுவனம் கூறியது. எனினும் தற்போதைய மதிப்பினை இந்த நிறுவனம் வெளிடவில்லை.

வாகன விற்பனை அதிகரிக்கும்
சியாம் அறிக்கையின் படி, ஹீரோ மோட்டோகார்ப்பின் உற்பத்தி வெளியீடு கடந்த ஆண்டை காட்டிலும் 35% அதிகரித்து, 7,91,137 யூனிட்களாக அதியக்ரித்துள்ளதாகவும், இது சந்தையில் 38.5% பங்கு வகிப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு கொரோனா தடுப்பு மருந்து பற்றிய சாதகமான அறிவிப்புகள், பொருளாதாரத்தினை மீட்க பயன்படும். இதனால் சந்தை விரைவில் மீண்டு வரலாம் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.