கொரோனா வைரஸ் பிரச்சனை வந்த பின், போக்குவரத்து, பயணம் எல்லாம் கிட்டத்தட்ட முட்டுச் சந்தில், முட்டிக் கொண்டு நிற்கிறது.
காய்கறி வாங்க வெளியே போவது, பால், மருந்து, மாத்திரை, மருத்துவமனைகளுக்கு வெளியே போவதே இன்றைய தேதிக்கு மிகப் பெரிய பயணமாக இருக்கிறது. வழக்கம் போல வாகனங்களைப் பயன்படுத்த முடியவில்லை.
இந்த லட்சணத்தில், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை எல்லாம் மரண அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் கம்பெனி ஒன்றின் நிகர லாபம் 95 % சரிந்து இருக்கிறதாம்.
ஹீரோ மோட்டோ கார்ப்
இந்திய நாட்டின் மிகப் பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் கம்பெனியின் ஜூன் 2020 காலாண்டு முடிவுகள் சமீபத்தில் வெளியாயின. இந்த ஜூன் 2020 காலாண்டில் 95.12 % நிகர லாபம் சரிந்து இருக்கிறதாம். இது தான் நம் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் பெரிய செய்தி.
நிகர லாபம்
கடந்த ஜூன் 2019 காலாண்டில் ஹீரோ மோட்டோ கார்ப் கம்பெனியின் நிகர லாபம் 1,257 கோடி ரூபாயாக இருந்தது. இந்த ஜூன் 2020 காலாண்டில் நிகர லாபம் வெறும் 61.31 கோடியாக சரிந்து இருக்கிறது. ஆக 95 சதவிகித நிகர லாபம் தடாலென சரிந்து இருக்கிறது.
வருவாய் டவுன்
அதே போல, ஹீரோ மோட்டோ கார்ப் கம்பெனியின் வருவாயும் பயங்கரமாக சரிந்து இருக்கிறதாம். இந்த ஜூன் 2020 காலாண்டில் வெறும் 5.29 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்று இருக்கிறார்களாம். வாகன விற்பனையும் 57 % சரிந்து இருக்கிறது. எனவே வருவாய் 62 % சரிந்து 2,971 கோடி ரூபாயாக இருக்கிறதாம்.
கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸால் தான் இந்த அளவுக்கு, ஹீரோ மோட்டோ கார்ப் கம்பெனியின் வியாபாரம் அடி வாங்கி இருக்கிறது என கம்பெனி தரப்பில் இருந்து சொல்லி இருக்கிறார்கள். தற்போது மே, ஜூன் மாதங்களில் மெல்ல வியாபாரம் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications