இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன விற்பனை சந்தையை விட்டு வெளியேற முடிவு செய்த அமெரிக்காவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஹார்லி டேவிட்சன், கடைசி நேரத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து உற்பத்தி மற்றும் விற்பனையில் இறங்க முடிவு செய்தது.
இதன் வாயிலாக ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் விற்பனைக்காகப் பிரத்தியேகமாக ஒரு நிறுவனத்தைத் துவங்க முடிவு செய்துள்ளது ஹீரோ மோட்டோகார்ப். இதன் மூலம் ஹார்லி டேவிட்சனின் பிரண்டை தனிப்பட்ட முறையில் நிலைநாட்டுவது மட்டும் அல்லாமல் வர்த்தகத்தைச் சிறப்பாக நிர்வாகம் செய்யவும் முடியும்.
டொனால்டு டிரம்ப் அரசு
அமெரிக்கா தனது வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகச் சீனா, இந்தியா உட்பட் பல நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் பொருட்கள் மற்றும் சேவை மீது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு அதிகளவிலான வரியை விதித்தது.
வரி விதிப்பு
அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு எதிராக மோடி தலைமையிலான மத்திய அரசு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பைக் மற்றும் இதர பொருட்கள் மீது அதிகளவிலான வரியைக் குறைத்தது. இதன் பின்பு டிரம்ப் வெளியிட்ட ஒரு டிவீட்டால் மத்திய அரசு ஹார்லி டேவிட்சன் மீது விதிக்கப்பட்ட வரியைப் பாதியாகக் குறைந்தது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம்
ஏற்கனவே இந்தியாவில் மந்தமான வர்த்தகத்தைக் கொண்டு இருந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்த வரி விதிப்பால் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து இந்தியா சந்தையில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்தது.
ஹீரோ மோட்டோகார்ப் - ஹார்லி டேவிட்சன் கூட்டணி
இதன் படி இந்திய வர்த்தகத்தை ஹீரோ மோட்டோகார்ப்-யிடம் தனது வர்த்தகத்தை விற்பனை செய்துவிட்டு நேரடி விற்பனையில் இருந்து ஹார்லி டேவிட்சன் விலகியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் ஹார்லி டேவிட்சன் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து சேவை அளிக்கவும், இந்தியாவில் இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவே தற்போது ஹீரோ நிறுவனத்துடன் கூட்டணியில் இப்புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ளது ஹார்லி டேவிட்சன்.
ஹீரோ பவன் முஞ்சால்
ஹார்லி டேவிட்சன் நிறுவன விற்பனைக்காக ஹீரோ மோட்டோகார் புதிதாக உருவாக்கியுள்ள நிறுவனத்திற்கு ரவி அவலூர் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். ரவி ஹீரோ மோட்டோகார்ப் குழுமத்தின் தலைவரான பவன் முஞ்சால் உடன் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைவர்
ரவி அவலூர் இன்ஜின் மற்றும் இன்ஜின் பாகங்களைத் தயாரிக்கும் கூப்பர் நிறுவனத்தின் மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தகப் பிரிவின் தலைவராக இருந்தவர், இதற்கு முன் டூகாட்டி இந்தியாவின் தலைவராக இருந்தவர் ரவி. இந்நிலையில் தற்போது ஹீரோ மோட்டோகார்ப் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய ஹார்லி டேவிட்சன் வர்த்தகப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
முக்கியப் பணிகள்
இப்புதிய நிறுவனத்தின் நிர்வாகத்தில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 4 நிர்வாகத் தலைவர்களும் இடம்பெற உள்ளனர். இப்புதிய நிறுவனம் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் விற்பனை, மார்க்கெட்டிங், வாடிக்கையாளர்கள் சேவை, சர்வீஸ், மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய பணிகளில் ஈடுபட உள்ளது.
ஹார்லி டேவிட்சன் வர்த்தகம்
மேலும் வெளிநாட்டில் இருந்து ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளை மொத்தமாக இறக்குமதி செய்து இந்தியா முழுவதிலும் இருக்கும் தனது விற்பனையகங்களில் விற்பனை செய்ய உள்ளது. இதனால் ஹார்லி டேவிட்சன் வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனத்தின் அனைத்து விதமான சேவைகளும் எவ்விதமான தடையும் இல்லாமல் கிடைக்கும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications