கட்டுக்கு அடங்காமல் போகும் கொரோனா.. அனைத்து உற்பத்தி ஆலைகளையும் மூட ஹீரோ மோட்டோகார்ப் திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்று எந்த சேனல்கள், செய்தித்தாள்கள், சோசியல் மீடியாக்கள் என அனைத்திலும் பரப்பரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் கொரோனா வைரஸ் என்ற ஒரு வார்த்தை தான்.

ஆனால் இதன் தாக்கம் உலகளவில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது என்றே கூறலாம். அந்தளவுக்கு பல ஆயிரம் பேர்களை பலி கொண்டுள்ளது இந்த கொடிய வைரஸ்.

அந்தளவுக்கு அதன் உக்கிரத்தினை பரப்பி வருகிறது எனலாம். இந்த நிலையில் உலகளவில் உள்ள பல தொழில்சாலைகள், தொழிலகங்கள் என பலவும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உற்பத்தி ஆலைகள் மூட திட்டம்

உற்பத்தி ஆலைகள் மூட திட்டம்

அந்த வகையில் ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவினை சேர்ந்த மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளராகும். இந்த நிறுவனம் உலகளவில் பரவி வரும் கொடிய வைரஸான கொரோனாவின் தாக்கத்தினால் இந்தியா, கொலம்பியா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தனது உற்பத்தி ஆலை மற்றும் அசெம்பிளி ஆலையை இந்த மாதம் இறுதி வரை முடக்க திட்டமிட்டுள்ளது.

அதிகரித்து வரும் பாதிப்பு

அதிகரித்து வரும் பாதிப்பு

அதிலும் இந்த மூடுதலில் ஹரியானாவில் உள்ள நீம்ரானாவில் உள்ள உலகளாவிய பாகங்கள் மையமும் இதில் அடங்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சனிக்கிழமை மட்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 315-ஐ தொட்டுள்ள நிலையில், சனிக்கிழமை மட்டும் 60 பேர் இந்த வைரஸினால் தாக்கம் அடைந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் 4 ஆக உள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இப்படி ஒரு முடிவினை இந்த நிறுவனம் எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

வீட்டில் இருந்தும் பணியாற்றலாம்

வீட்டில் இருந்தும் பணியாற்றலாம்

வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் உள்ள கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையம் உட்பட மற்ற அனைத்து செயல்பாடுகளிலும் உள்ள ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றுவர் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அன்றாடம் எப்போதும் போல இயங்க உடல் மிக அவசியம். ஆக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வைரஸின் நிலையை கண்கானிக்க குழு

வைரஸின் நிலையை கண்கானிக்க குழு

மேலும் கொரோனா வைரஸின் நிலையை கண்கானிக்க ஆரம்ப கட்டத்திலிருந்தே ஒரு பணிக்குழுவை நிர்னயித்துள்ளதாகவும் கூறியுள்ளது. அதன் மூலம் ஊழியர்களுக்கு பல தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாகவும் ஹீரோ மோட்டோ கார்ப் தெரிவித்துள்ளது. ஆக நிறுவனம் கொரோனாவினால் கடுமையான தாக்கத்தினை எதிகொண்டாலும் ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வீட்டில் இருக்க பரிந்துரை

வீட்டில் இருக்க பரிந்துரை

இந்த நிலையில் மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், எஃப்.சி.ஏ இந்தியா, வோல்க்ஸ்வேகன் பயணிகள் கார்கள் மற்றும் பல வாகன உற்பத்தியாளர்கள் ஏற்கனவே தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில், டாடா மோட்டார்ஸ் புனேவில் உள்ள தனது ஆலையை விரைவில் மூடலாம் எனவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பாதிப்பா?

இவ்வளவு பாதிப்பா?

உலக்கெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் தாக்கத்தினால், உலகப் பொருளாதாரமும் பேரழிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் உலகளவில் 12,944 பேர் பலியாகியுள்ள நிலையில், 3,03,180 பேரினை இந்த வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உலகளவில் பல நிறுவனங்கள் தங்களது ஆலைகளை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் பல நிறுவனங்கள் தங்களது பல ஆலைகளை மூடத் தொடங்கியுள்ளன.

பெரும் பிரச்சனை தான்

பெரும் பிரச்சனை தான்

ஏற்கனவே ஆட்டோமொபைல் துறையில் நிலவி மந்தமான நிலைக்கு மத்தியில், இந்திய ஆட்டோமொபைல் துறையினர் பெரும் பிரச்சனையை சந்த்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவினால் மீண்டும் பெரும் பிரச்சனைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் நிறுவனங்கள், கொரோனாவினால் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hero motocorp shuts down all plants amid coronavirus pandemic

India's largest two-wheeler manufacturer Hero MotoCorp Ltd shut down operations across all its manufacturing and assembly plants.
Story first published: Sunday, March 22, 2020, 10:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X