இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக, இந்தியாவில் இருக்கும் தனது உற்பத்தி தொழிற்சாலைகள் அனைத்தையும் தற்காலிகமாக மூடியுள்ளது. இதன் மூலம் ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் உற்பத்தி பணிகள் மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஹீரோமோட்டோ கார்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழியர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிர்வாகம் முன்கூட்டியே முடிவுகளை எடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் இருக்கும் அனைத்து தொழிற்சாலைகளும், குளோபல் பார்ட்ஸ் சென்டர் உட்பட அனைத்து உற்பத்தி தளங்களும் கொரோனா தொற்றுக் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டு உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ள இந்த நேரத்தில் அனைத்து தொழிற்சாலைகளிலும் உற்பத்தி தளத்திலும் maintenance பணிகளை முழுமையாக முடிக்கப்படத் திட்டமிட்டுள்ளது ஹீரோமோட்டோகார்ப் நிறுவனம்.

தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்டு உற்பத்தி பணிகளை இக்காலாண்டில் மீதமுள்ள நாட்களில் ஈடுசெய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது மாநில வாரியாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ள காரணத்தால் கொரோனா தொற்று அளவீடுகளைக் கொண்டு உற்பத்தி பணிகள் துவங்கப்படும்.

மேலும் எப்போது தொழிற்சாலை திறக்கப்படும் எனத் தெரிவிக்காத ஹீரோ மோட்டோகார்ப் குறைந்த காலம் மட்டுமே உற்பத்தி நிறுத்தம் இருக்கும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications