பைக் வாங்க போறீங்களா? ஜனவரிக்குள்ள வாங்கிடுங்க.. ஜனவரி 1க்கு மேல் விலை அதிகரிக்கப்போகுது..!

மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் பயணிகள் மற்றும் வர்த்தக வாகன விலையினை அதிகரித்த ஒரு நாளுக்கு பிறகு, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும், தனது வாகன விலையை அதிகரிக்கபோவதாக அறிவித்துள்ளது.

இது வரும் ஜனவரி 1, 2021 முதல் ஹீரோ மோட்டோகார்ப் வாகனங்களுக்கு 1500 ரூபாய் அதிகரிக்க போவதாக அதிகரித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது அதுகரித்து வரும் மூலப்பொருட்களின் விலையை ஈடுசெய்யும் விதமாக இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்த முன்னணி ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாகன விலை அதிகரிக்கும்

வாகன விலை அதிகரிக்கும்

ஆக இந்த செலவின அதிகரிப்பினை ஈடுசெய்யவே இந்த விலை அதிகரிப்பானது, ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எங்களின் அனைத்து தயாரிப்புகளிலும் விலையை 1,500 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் மும்பை பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விரைவில் விலையேற்றம் அறிவிக்கப்படும்

விரைவில் விலையேற்றம் அறிவிக்கப்படும்

இந்த விலை அதிகரிப்பானது ஒவ்வொரு மாடலுக்கும் ஏற்ப மாறுபடும். ஆக சரியான நேரத்தில் எங்களது விநியோகஸ்தர்களுக்கும் இந்த விலையேற்றம் அறிவிக்கப்படும் என உலகின் மிகப்பெரிய வாகன விற்பனையாளர் தெரிவித்துள்ளார். டெல்லியை தளமாகக் கொண்ட இந்த ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனம் இரும்பு, அலுமினியம்,
பிளாஸ்டிக் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் விலையும் அதிகரித்து வருவதாகவும், இதனால் விலை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் காலாண்டில் லாபம்

செப்டம்பர் காலாண்டில் லாபம்

கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 8.99% அதிகரித்து, 953.45 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 874.80 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே செயல்பாட்டு வருவாய் 23.7% அதிகரித்து, 9,367.34 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 7,570.70 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விற்பனை எவ்வளவு?

விற்பனை எவ்வளவு?

இதே இந்த செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் 18.22 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு வாடிக்கையாளர்கள் தற்போது தான் மீண்டு வந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தொற்று நோயின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும், தனி நபர் இடைவெளியினை கடைபிடிக்கும் பொருட்டும் மக்கள் இரு சக்கர வாகனங்களை நாட தொடங்கியுள்ளனர்.

ஜுன் காலாண்டில் விற்பனை

ஜுன் காலாண்டில் விற்பனை

இதே கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனம் 16.91 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் வெறும் 5.65 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளது. இது கொரோனா லாக்டவுன் சமயத்தில் ஷோரூம்கள் பூட்டப்பட்டிருந்த நிலையில், இந்த விற்பனை இருந்ததாகவும் கூறியுள்ளது.

மகேந்திரா & மகேந்திரா

மகேந்திரா & மகேந்திரா

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான மகேந்திரா & மகேந்திரா நிறுவனம், பயணிகள் மற்றும் வர்த்தக வாகன விற்பனை விலையினை ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனமும் மாடல்களுக்கு ஏற்றவாறு விலையை அதிகரிக்க போவதாகவும், இது மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பால் இந்த விலையேற்றத்தினை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+