டாடா மோட்டார், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்களது குறிப்பிட்ட சில வாகனங்கள் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளன.
இந்த விலை அதிகரிப்பானது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. ஆக வரவுள்ள நிதியாண்டில் வாகனங்களின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக வாகனங்கள் வாங்க திட்டமிடுவோர் அதற்கு முன்னதாக வாங்கிக் கொள்ளலாம்.
டாடா விலை அதிகரிப்பு திட்டம்
இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏப்ரல் 1ல் இருந்து அதன் குறிப்பிட்ட சில வாகனங்கள் விலையானது 5% வரையில் அதிகரிக்கலாம் என அறிவித்துள்ளது.
குறிப்பாக அதன் வணிக வாகனங்களுக்கான விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விலை அதிகரிப்பு
இது நிறுவனம் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப வாகனங்களின் உற்பத்தி செய்துள்ள நிலையில், அவற்றின் உற்பத்தி செலவானது அதிகரித்துள்ளது. ஆக இது விலை அதிகரிப்பானது வந்துள்ளது. இது மேற்கொண்டு தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இது அதன் அனைத்து வகையான வணிக வாகனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விலையேற்றம் என்பது வாகனத்தின் மாடலுக்கு ஏற்ப மாறுபடும் என அறிவித்துள்ளது.
பயணிகள் வாகனம்
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விலையை 1.2% உயர்த்தியது. இது தொடர்ந்து மூலதன செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் விலை அதிகரிப்பானது செய்யப்பட்டதாகவும் அறிவித்தது. இந்த நிலையில் தற்போது வணிக வாகனங்களுக்கான விலையும் அதிகரித்துள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப்
இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோமோட்டோ கார்ப்பும், அதன் வாகன விலையை ஏப்ரல் 1 முதல் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் மோட்டார்சைக்கிள்ஸ் மற்றும் ஸ்கூட்டர்களும் அடங்கும் எனவும், இதன் விலை சுமார் 2% அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது வாகனங்களின் மாடலை பொறுத்து இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications