முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், குருகிராமில் ஒரு தற்காலிக 100 படுக்கைகள் கொண்ட கொரோனா பராமரிப்பு மையத்தினை அமைக்க, குருகிராமின் மாவட்ட நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குருகிராமில் உள்ள பெண்கள் கல்லூரியில் இந்த அமைப்பதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது கோவிட் பராமரிப்பு மையம் எங்கள் மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிக்க உதவும். இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டபட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க முடியும்.
மிக்க மகிழ்ச்சி
மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கள் நிவாரண நடவடிக்கைகளின் அளவை விரிவுபடுத்த உதவும் என்று, குருகிராம் துணை ஆணையர் யாஷ் கார்க் கூறினார். சமுதாயத்திற்காக தனது பங்கினை அளிப்பதில் ஹீரோ மிக மகிழ்ச்சியடைகிறது. இது அரசு மற்றும் தனியார் கூட்டாண்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளது.
நிறுவனங்கள் முன்வர வேண்டும்
இது போன்ற ஒரு சவாலான நேரத்தில் தனியார் நிறுவங்களையும், தனியார் அமைப்புகளையும் இதே போன்ற முயற்சிகளுக்கு முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கார்க் கூறியுள்ளார்.
100 படுக்கைகள் இந்த கோவிட் பராமரிப்பு மையம் குருகிராமில் உள்ள சுகாதார உள்கட்டமைப்பை ஆதரிப்பதில், இன்னும் நீண்ட தூரம் செல்லும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் கூறியுள்ளது.
எங்கெங்கு?
ஹீரோ நிறுவனம் இரண்டாவது அலைக்கு எதிரான போரில் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தவிர டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு ஹீரோ ஆதரவளித்து வருகின்றது என்றும் தெரிவித்துள்ளது.
இயல்பு நிலைக்கு வரும்?
உண்மையில் ஒவ்வொரு நிறுவனமும் இது போன்ற நடவடிக்கைகளை, கையில் எடுத்தால், இந்தியா விரைவில் இந்த கொரோனா என்னும் மோசமான நெருக்கடியான நிலையில் வெளி வரும். இதனால் மக்களும் விரைவில் மீண்டு வர முடியும். பொருளாதாரமும் மீண்டு வரும். நிறுவனங்களும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications