நீங்க 90ஸ் கிட்ஸ் ஆக இருந்தால் ஹீரோ ஹோண்டாவின் கிரிஸ்மா ZMR பைக்-ஐ மறந்திருத்திருக்க மாட்டீர்கள். இன்று சூப்பர் பைக் பிரிவில் அனைவரும் வாங்கும் படி பல பைக்குகள் வந்தாலும் 2000 முதல் 2014 வரையில் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்போர்ட்ஸ் பைக் என்றால் கிரிஸ்மா ZMR தான்.
ஹீரோ ஹோண்டா கூட்டணியில் 2 முறை கிரிஸ்மா பைக் அறிமுகம் செய்யப்பட்டது, இதில் 2009 அறிமுகம் செய்யப்பட்ட ZMR பைக் மிகவும் பிரபலம். அதை தொடர்ந்து 2014ல் ஹீரோ மோட்டோ கார்ப் தனது வெற்றி பிராண்டான கிரிஸ்மா பைக்-ன் புதிய டிசைனில் அறிமுகம் செய்தது. ஆனால் EBR டிசைன் கொண்ட கிரிஸ்மா ZMR பல விமர்சனங்களை பெற்றது.

கிட்டத்தட்ட 9 வருடத்திற்கு பின்பு கிரிஸ்மா வரிசையில் XMR 210 என்ற பெயரில் புதிய பைக்-ஐ ஹீரோ மோட்டோ கார்ப் பட்ஜெட் விலையில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் செயல்திறன் குறித்து பெரிய அளவில் பேச முடியாது முறையாக பயன்படுத்தி அதன் 210சிசி இன்ஜின் வெளிப்படுத்தும் 25.5 PS பவர் மற்றும் 20.4 NM டார்க் எப்படி இந்திய சாலையில் ஒத்துழைக்கிறது என்பதை முறையாக சோதிக்க வேண்டும்.

ஆனால் வர்த்தக ரீதியாக பார்க்கும் போது, இந்தியாவில் ப்ரீமீயம் பைக் அதாவது 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான பைக்குகளின் விற்பனை எப்போதும் போல் இல்லாமல் சிறப்பாக உள்ளது. இந்த நிலையில் ஹீரோ மோட்டோ கார்ப் தனது புதிய கரிஸ்மா XMR 210 பைக்-ஐ வெறும் 1,72,900 ரூபாய்க்கு அறிமுகம் செய்ய உள்ளது.

இதனால் இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் தாக்கத்தை இந்த பைக் மீண்டும் ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் தனது புதிய கரிஸ்மா XMR 210 பைக்-ன் அறிமுக விலை தான் 1,72,900 ரூபாய், முதல்கட்ட விற்பனை முடிந்த பின்பு பைக் விலையை 1,82,900 ரூபாய் வரையில் உயர்த்த கூடும். இந்த பைக் ஐகானிக் யெல்லோ, டர்போ ரெட், மேட் பான்தம் பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஹீரோ மோட்டோ கார்ப் தனது புதிய கரிஸ்மா XMR 210 பைக்-ன் புக்கிங்கை இன்றே துவங்கியுள்ளது. சூப்பர் பைக் வாங்க விரும்பும், நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும், குறிப்பாக கல்லூரிக்கு பைக் கொண்டு செல்ல விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் இந்த பைக் விருப்பமான தேர்வாக இருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் சாலையில் புதிய கரிஸ்மா XMR 210 பைக்-ன் திறன் தெரியும் வரையில் எதுவும் நிச்சயமில்லை.


Click it and Unblock the Notifications