ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் ஐபிஓ வெளியிட இருக்கிறது. ஹீரோ மோட்டார்ஸ் குழுமத்தின் பிரதான நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ் பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியிடம் ஐபிஓ வெளியிடுவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
இந்த ஐபிஓ மூலம் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் 900 கோடி ரூபாய் பணத்தை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதன்படி புதிய புதிதாக ஈக்விட்டி பங்குகளை வெளியிட்டு 500 கோடி ரூபாயும், ஏற்கனவே இருக்கும் பங்குகளை ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்து 400 கோடி ரூபாயும் திரட்டுவதற்கு முடிவு செய்துள்ளதாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 23ஆம் தேதி தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் தெரிவித்துள்ளது. இதில் நிறுவன பிரமோட்டரான ஓபி மஞ்சல் தன்னிடம் இருக்கும் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறார்.

அதேபோல பாக்யோதய் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் ஹீரோ சைக்கிள்ஸ் மொத்தமாக 75 கோடி மதிப்புள்ள பங்குகளை ஆஃபர் ஃபாட் சேல் முறையில் விற்பனை செய்ய இருக்கின்றன. ப்ரீ ஐபிஓ முறையிலும் 100 கோடி ரூபாய் திரட்டுவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் ஹுரோ மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஹீரோமோட்டர்ஸ் நிறுவனத்தில் ஓபி மஞ்சல் 71.5 சதவீத பங்குகளை சொந்தமாக வைத்திருக்கிறார். அதே போல பாக்யோதய் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் ஹீரோ சைக்கிள்ஸ் ஆகியவை முறையே 6.28 சதவீதம் மற்றும் 2.0 சதவீதம் பங்குகளை வைத்திருக்கின்றன. சவுத் ஏசியா குரோத் இன்வெஸ்ட் நிறுவனம் 12.27% பங்குகளை சொந்தமாக வைத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆட்டோமேட்டிவ் டெக்னாலஜி சொல்யூசன் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது ஹீரோ மோட்டார்ஸ். இது தற்போது மின்சாரம் மற்றும் மின்சாரம் அல்லாத வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் கார்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனங்களாக இருக்கின்றன.
இந்த நிறுவனம் பிஎம்டபிள்யூ , டுகாட்டி மோட்டார், ஃபார்முலா மோட்டார்ஸ் ஆகியவை இதன் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். மஞ்சலுக்கு சொந்தமான இந்த நிறுவனம் integrated electric powertrain products தயாரித்து விற்பனை செய்யும் ஒரே இந்திய நிறுவனம் ஆகும். தன்னுடைய தொழிலில் 59 சதவீதத்தை இந்தியாவிலும், 29 சதவீதத்தை ஐரோப்பாவிலும் கொண்டிருக்கிறது. 2024ஆம் ஆண்டு மார்ச்சில் வெளியான அறிக்கையின் படி இந்த நிறுவனம் 17 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 58 சதவிகிதம் குறைவாகும்.
Written by: Devika


Click it and Unblock the Notifications