இந்தியா எலக்ட்ரிக் இரு சக்கர வாகன பிரிவில் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் ஓலா நிறுவனத்திற்குப் போட்டியாகப் பல நிறுவனங்கள் தனது தயாரிப்பு மற்றும் விற்பனையை மேம்படுத்தி வரும் நிலையில், 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது ஓலா.
இந்த நிலையில் ஓலா நிறுவனத்துடன் போட்டிப்போடுவதை விடவும் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தைக்கும் ஹீரோவாக மாற முடிவு செய்துள்ளது ஹீரோ மோட்டார்ஸ்.
ஹீரோ மோட்டார்ஸ் அடுத்த 3 ஆண்டில் சுமார் 1500 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
பங்கஜ் முஞ்சல்
பங்கஜ் முஞ்சல் தலைமையிலான ஹீரோ மோட்டார்ஸ் உலக நாடுகள் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் வேளையில் ஜீரோ எமிஷன்-க்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள காரணத்தாலும் தனது எலக்ட்ரிக் வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பை அதிகரிக்க அடுத்த 3 வருடத்தில் 1500 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.
ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள்
இதற்காக ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பிரிவான ஹீரோ மோட்டார்ஸ் சமீபத்தில் GEF கேப்பிடல் பார்ட்னர்ஸ் மற்றும் இதர பிற நிறுவனங்களிடம் இருந்து 10 சதவீத பங்குகளை வைத்து முதலீட்டை திரட்டியது.
எலக்ட்ரிக் வாகன துறை
இந்த முதலீடு மொத்தமாக எலக்ட்ரிக் வாகன துறையில் முதலீடு செய்து, ஹீரோ மோட்டோ இந்தியா மற்றும் தாய்லாந்து நாட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க உள்ளது. இந்தத் தொழிற்சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கியர் பாக்ஸ், டிஸ்க் பிரேக், போன்ற பலவற்றை தயாரிக்க உள்ளது.
1500 கோடி ரூபாய்
இந்த 1500 கோடி ரூபாய் முதலீடு குறித்துப் பங்கஜ் முஞ்சல் கூறுகையில் இந்த முதலீட்டை வைத்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரிபாகங்களை அதிநவீன ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கத் திட்டமிட்டு உள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள்
தற்போது நாங்க HIGH - END எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கியர்பாக்ஸ் தயாரித்து அளித்து வருகிறோம், இந்தப் பிரிவு வாடிக்கையாளர்கள் பட்டியலில் BMW, McLaren, AMG போன்ற முன்னணி பிராண்டுகள் உள்ளது.
ஐரோப்பா, வட அமெரிக்கா
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கியர்பாக்ஸ் -க்கான தேவை ஐரோப்பா, வட அமெரிக்காவில் அதிகமாக உள்ளது, இப்பிரிவு வர்த்தகம் மட்டும் வருடம் 2 பில்லியன் டாலர் அளவிலும் ஒவ்வொரு வருடமும் 18 சதவீத வளர்ச்சியில் உள்ளது.
60 சதவீத வருவாய்
இதன் மூலம் அடுத்த அடுத்தச் சில வருடத்தில் ஹீரோ மோட்டார் கார்ப் தனது மொத்த வருவாயில் 60 சதவீதத்தை எலக்ட்ரிக் உதிரிபாகங்கள் தயாரிப்புப் பிரிவில் இருந்து பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த 3 வருடத்தில் தற்போது இருக்கும் 5500 கோடி ரூபாய் வருவாயை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது.
தாய்லாந்து
மேலும் அடுத்த 18 மாதத்தில் ஹீரோ மோட்டார்ஸ் குழுமத்தில் 3 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட திட்டமிட்டு உள்ளதாகப் பங்கஜ் முஞ்சல் தெரிவித்துள்ளார். தற்போது தாய்லாந்தில் இருக்கும் தொழிற்சாலையில் இருந்து BMW நிறுவனத்திற்கான கியர் பாக்ஸ் தயாரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications