ஒட்டுமொத்த இந்தியாவிலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் துறை நிறுவனங்களுக்கு புதிய உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டுமாயின் விருப்பமான இடமாக இருப்பது தமிழ்நாடு நாடு தான். இதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் அமெரிக்காவின் முன்னணி லேப்டாப் மற்றும் பல்வேறு எலக்ட்கானிக்ஸ் கருவிகளைத் தயாரிக்கும் HP என அழைக்கப்படும் Hewlett Packard தமிழ்நாட்டில் லேப்டாப் தயாரிக்கத் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் முதல் கூகுள் வரையில் தனது எலக்ட்ரானிக்ஸ் கருவிகளைத் தயாரிக்கப்படும் வேளையில், இப்பட்டியலில் தற்போது அமெரிக்காவின் Hewlett Packard-ம் இணைந்துள்ளது.

அமெரிக்காவின் ஹெச்பி இன்க் மற்றும் டிக்சன் டெக்னாலஜிஸ்-ன் கிளை நிறுவனமான Padget Electronics ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் HP லேப்டாப்கள், பர்சனல் கம்பியூட்டர்கள் மற்றும் ஆல் இன் ஓன் சிஸ்டம்ஸ் ஆகியவற்றைத் தயாரிக்கும் உற்பத்தி ஆலையை அமைக்கத் தமிழக அரசுடன் ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
"மேக் இன் இந்தியா" முயற்சியின் கீழ் உற்பத்தி இணைப்பு ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் வாயிலாக இந்த கூட்டணி தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.
"HP Inc. மற்றும் Padget Electronics ஆகியவை இன்று தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைத்து HP லேப்டாப்கள், பர்சனல் கம்பியூட்டர்கள் மற்றும் ஆல் இன் ஓன் சிஸ்டம்ஸ் உற்பத்தி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதை பகிர்ந்துகொள்ள மகிழ்ச்சியடைகிறேன். இது பிரதமர் நரேந்திர மோடி-யினஅ மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் PLI திட்டத்தின் வெற்றியாகும்" என்று வைஷ்ணவ் கூறினார்.
தற்போது நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்துள்ள இந்தியாவின் வளர்ந்து வரும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் தொழில் துறையில் இந்த புதிய ஆலை இணைந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டணி ஆரம்பத்தில் இந்த தொழிற்சாலையில் சுமார் 1,500 பேரை பணியில் அமர்த்தும். மேலும் உற்பத்தி அதிகரிக்கும் போது மேலும் வேலைவாய்ப்புக்கான வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications