சென்னை: பிரபல ஐடி சேவை நிறுவனமான Hexaware Technologies, தமிழ்நாட்டின் புதிய ஐடி நகரமாக மாறி வரும் கோவையில் புதிய அலுவலகத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் முடிவின் மூலம், கோவையில் உள்ள திறன்மிக்க பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், உலகளவில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யவும் Hexaware நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் சமீபத்தில் 2024 ஆம் ஆண்டில் இந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, போலந்து மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளில் சுமார் 6,000 முதல் 8,000 புதிய பணியாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.

இந்தியாவில், ஹைதராபாத், நொய்டா, கோயம்புத்தூர், டேராடூன் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பணியாளர்களை பணிக்கு எடுக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், அகமதாபாத், இந்தூர், புனே, மும்பை, சென்னை, டேராடூன், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இண்டர்வியூவ் நடத்தவும் ஹெக்ஸாவேர் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.
ஐடி சேவை துறையில் புதிய வேலைவாய்ப்புகள் இல்லாமல் பட்டாதாரிகள் தவித்து வரும் வேளையில், ஹெக்ஸாவேர் நிறுவனத்தின் அறிவிப்பு இந்திய ஐடி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்தது. இதை தொடர்ந்து தற்போது கோயம்புத்தூர் டெக் ஊழியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
Hexaware நிறுவனத்தின் Business Process Services (BPS) பிரிவு ஏற்கனவே கோவையில் இயங்கி வந்தாலும், இந்த புதிய அலுவலகம் டேட்டா மார்டனைசேஷன், ஆட்டோமேஷன், கிளவுட் கம்பியூட்டிங், சாப்ட்வேர் டெவலப்மென்ட், டேட்டா கம்பிளையன்ஸ் அண்ட் செக்யூரிட்டி, செயற்கை நுண்ணறிவு (AI), பிஸ்னஸ் இண்டலிஜென்ஸ், அட்வான்ஸ் அனலிட்டிக்ஸ் ஆகிய துறைகளில் டேட்டா மற்றும் டெஸ்டிங் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் என ஹெக்ஸாவேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவையில் புதிய அலுவலகம் திறப்பதற்கான முடிவு, அங்குள்ள வாய்ப்புகள், திறன்மிக்க பணியாளர்கள, தொடர்ச்சியாக திறமையான பட்டதாரிகள் கிடைப்பதற்கும் ஏற்ற இடமாக இருப்பதால் BPS சேவையில் இருந்து தற்போது டேட்டா மற்றும் டெஸ்டிங் சேவை பிரிவுகளுக்கு கோவை-க்கு விரிவாக்கம் செய்துள்ளது.
மேலும் ஹெக்ஸாவேர்-ன் புதிய விரிவாக்கத்திற்காக, கோயம்புத்தூரில் பிரபலமான KGISL SEZ பகுதியில் புதிய அலுவலகம் திறக்க உள்ளது.
இதேபோல் கோயம்புத்தூரில் சென்னை, பெங்களூர்க்கு இணையாக பேருந்து, விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இருப்பதால், இணைப்புத் திறன் (connectivity) மிக்க நகரமாகவும் கோவை திகழ்கிறது.


Click it and Unblock the Notifications