உலகம் முழுவதுமே டிரெண்டுக்கு ஏற்றபடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் .குறிப்பிடத் துறையில் திடீரென வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும், அதிக ஊதியமும் கிடைக்கும். அந்த வகையில் இந்தியாவில் தற்போது அதிக ஊதியம் தரக்கூடிய 10 வேலைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள போகிறோம்..
1. ப்ராடக்ட் மேனேஜர் (Product Manager): ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை(Product) வடிவமைப்பது மேம்படுத்துவது மற்றும் அதனை உரிய மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகிய அனைத்தும் நிறைந்த பணி தான் ப்ராடக்ட் மேனேஜர். இதற்கான உத்திகளை வகுப்பது, மார்க்கெட்டிங்கை கவனிப்பது ,எதிர்காலத்தில் இதனை எவ்வாறு மேம்படுத்துவது என்பன உள்ளிட்ட பொறுப்பு ப்ராடக்ட் மேனேஜரிடம் இருக்கும். இதற்கு பிடெக் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி படித்தவர்கள் , எம்பிஏ முடித்தவர்கள் அல்லது சர்டிபிகேட் ஆஃப் ப்ராடக்ட் மேனேஜ்மென்ட் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு சராசரியாக ஆண்டுக்கு 7 முதல் 26 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.

2. மருத்துவத்துறை: இந்தியாவில் மரியாதைக்குரிய ஒரு துறையாக மருத்துவத்துறை இருந்து வருகிறது. தற்போது நல்ல ஊதியம் தரக்கூடிய அதே வேளையில் நாட்டுக்கு மிகவும் அவசியமான துறையாகவும் இது இருக்கிறது. இதில் எம்பிபிஎஸ் ,எம்டி பயின்றவர்கள் ஆண்டுக்கு 7 முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான ஊதியத்தில் வேலைக்கு செல்ல முடியும்.
3. பிளாக்செயின் டெவலப்பர்ஸ் (Blockchain developers): பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கு உதவும் பிளாக் செயின் லெட்ஜர் அமைப்புகளை வடிவமைப்பது ,கட்டமைப்பது மற்றும் பராமரிப்பது ஆகிய பணிகளைக் கொண்டது தான் பிளாக் செயின் டெவலப்பர் . இதற்கு பிடெக் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி படித்திருக்க வேண்டும். ஆண்டுக்கு 8 முதல் 45 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும்.
4. டேட்டா சயின்டிஸ்ட் :கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு வேலை வாய்ப்பு தான் டேட்டா சயின்டிஸ்ட். சில ஆண்டுகளில் இந்த துறையில் இலட்சக்கணக்கானவர்கள் வேலைக்கு தேவைப்படுவார்கள். இதற்கு பிடெக் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி படித்திருக்க வேண்டும். ஆண்டுக்கு 10 முதல் 25 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும். அமேசான் , வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.
5. ஃபுல் ஸ்டாக் சாப்ட்வேர் டெவலப்பர் (Full Stack Software Developers) தற்போது ஹை டிமாண்டில் இருக்கக்கூடிய ஒரு வேலை இது. இந்தியாவில் அதிக ஊதியம் தரக்கூடிய ஒரு வேலை வாய்ப்பு இது என கூறலாம் . ஒரு மென்பொருள் அல்லது இணையதளத்திற்கு தேவையான ஃப்ரண்ட் மற்றும் பேக் என்ட்களை உருவாக்கும் வல்லுனர்கள் தான் ஃபுல் ஸ்டாக் டெவலப்பர்கள். இதற்கு பிடெக் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி படித்திருக்க வேண்டும். ஆண்டுக்கு 9 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் கிடைக்கும்.
6. மெஷின் லேர்னிங்: செயற்கை நுண்ணறிவுத் துறையின் ஒரு பிரிவுதான் மெஷின் லேர்னிங். இதில் தற்போது வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இதற்கு பிடெக் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரி படித்திருக்க வேண்டும். ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் கிடைக்கும். ஐபிஎம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
7. சிஏ: அனைத்து தொழில்களுக்கும் அவர்களுடைய நிதியை மேலாண்மை செய்வதற்கு இந்த வேலை கட்டாயம் ஆகிறது. எனவே இவர்கள் ஐசிஏஐ- யின் கோர்ஸ் முடித்து சான்றிதழ் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் .ஆண்டுக்கு 9 முதல் 35 லட்சம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கிறது.
8. மார்க்கெட்டிங் மேனேஜர்: ஒரு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவை விரிவாக்கம் செய்து வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்து, வருமானத்தை அதிகரிக்கும் பொறுப்பு இந்த பணிக்கு இருக்கிறது. அனைத்து தொழில்களுக்குமே இது கட்டாயம். மார்க்கெட்டிங் பிரிவில் மேலாண்மை அல்லது பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது எம்பிஏ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் . ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு மேல் இதில் ஊதியம் கிடைக்கும்.
9. ஏஐ இன்ஜினியர்: செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட மாடல்களை உருவாக்கும் பொறுப்பு இந்த வேலையில் இருப்பவர்களுக்கு உண்டு. பிடெக் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து இருக்கவேண்டும். ஆண்டுக்கு 7 முதல் 40 லட்சம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும். அமேசான், கூகுள் ஐபிஎம் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு குவிந்திருக்கிறது.
10. பிசினஸ் அனலிஸ்ட் : ஒரு தொழில் எப்படி செயல்படுகிறது ,அது எப்படி தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை மதிப்பாய்வு செய்து அதற்கு ஏற்ற செயல்பாட்டு மாடல்களை உருவாக்கி வழங்கக்கூடிய ஒரு வேலை தான் இது. இந்தியாவில் தற்போது டிமாண்டில் இருக்கக்கூடிய ஒரு வேலை வாய்ப்பு . பொருளாதாரம், நிதி, கம்ப்யூட்டர் சயின்ஸ், டேட்டா சயின்ஸ், புள்ளியல் உள்ளிட்ட பிரிவுகளில் படிப்பை முடித்தவர்கள் இதில் வேலையில் சேரலாம். ஆண்டுக்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேல் ஊதியம் கிடைக்கும் . மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் இதற்கு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications