சம்பளத்தை கொட்டிகொடுக்கும் நிறுவனங்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் 1.5 கோடி ரூபாய் சம்பளம் என்றால் கசக்குமா என்ன? ஆனா அது அவ்வளவு ஈசியா கிடைக்குமா என்ன..? சரி அப்படி என்ன வேலை..? யார் இவ்வளவு அதிகமான சம்பளம் கொடுக்கிறார்கள்..? இவ்வளவு சம்பளம் கொடுத்தும் ஏன் ஆட்கள் பற்றாக்குறை..?
இன்றைய டெக் உலகில் அதிகம் பேசுப்படும், விவாதிக்கபடும் ஒரு தொழில்நுட்பம் என்றால் அது.... ChatGPT தான். 2022ல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ள காரணத்தால் இத்தொழில்நுட்பத்தில் கில்லி போன்ற ஆட்கள் மிகவும் குறைவு.

இதனால் ChatGPT, LLM, GENERATIVE AI பிரிவில் திறன்படைத்த ஊழியர்களுக்கு எவ்வளவும் சம்பளம் வேண்டுமானாலும் அள்ளிக்கொடுக்க தயாராகியுள்ளனர்.
இதனாலேயே கூகுள், OpenAI நிறுவனத்தில் பணியாற்றிய பலர் தங்களுடைய பணியை கடந்த 3 மாதத்தில் ராஜினாமா செய்துவிட்டு போட்டி நிறுவனத்தில் அதிகப்படியான சம்பளத்தில் பணிக்கு சேர்வது மட்டும் அல்லாமல் பலர் இத்தொழில்நுட்பம் சார்ந்து தனியாக நிறுவனத்தை துவங்கி வருகின்றனர்.
AI பிரிவில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில் பிரபலமான DataBricks நிறுவனம் இந்த வாரம் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான MosaicML சுமார் 1.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் MosaicML துவங்கி 2 வருடங்கள் மட்டுமே ஆன நிலையில் 1.3 பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெற்று பெரிய தொகையை லாபமாக பார்த்துள்ளது.
இதனால் பல டெக் வல்லுனர்கள் இத்தொழில்நுட்பத்திற்குள் வர முயற்சி செய்வதோடு, சொந்தமாக நிறுவனத்தை துவங்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இவ்வளவு டிமாண்ட் இருக்கும் ஒரு துறையில் திறன் வாய்ந்த ஊழியர்கள் கிடைத்தால் கட்டாயம் 1.5 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அமெரிக்காவில் ChatGPT, LLM, GENERATIVE AI பிரிவில் திறன்படைத்த ஊழியர்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்பு இருப்பது மட்டும் அல்லாமல் அரம்பமே 1,25,000 டாலர் முதல் 185000 டாலர் வரையிலான தொகையை சம்பளமாக கொடுக்கின்றனர் என அமெரிக்காவின் பிரபல Recruiting from Scratch தளம் ஆய்வில் தெரிவித்துள்ளது.

உதாரணமாக சான் பிரான்சிஸ்கோ-வை சேர்ந்த Anthropic என்ற AI நிறுவனம் மார்ச் மாதம் Prompt Engineer என்ற பணிக்கு 3,35,000 டாலர் வரையிலான தொகையை சம்பளமாக கொடுப்பதாக அறிவித்தது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 2.7 கோடி ரூபாய்.
Prompt Engineer என்றால் ChatGPT போன்ற AI Chatbot தளத்தில் எப்படி கேள்வி கேட்டால் எப்படி பதில் வருகிறது என்பதை ஆய்வு செய்து மக்களுக்கு ஏதுவாக கோடிங்-ஐ திருத்துவது தான் இந்த பணியின் அடிப்படை என கூறப்படுகிறது. Prompt Engineer பற்றி கூடுதல் தகவல் அல்லது விளக்கம் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க...!!
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications