கோயம்புத்தூரில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி. அமெரிக்காவைச் சேர்ந்த Data Caliper Llc நிறுவனம், Java Full Stack Developer பதவிக்கு பணியாளர்களை தேடி வருகிறகு.
இது முழு நேரம் மற்றும் நிரந்தர வேலையாகும், கான்டிராக்ட், பார்ட் டைம் வேலை இல்லை. இந்த பணியில் விண்ணப்பிக்க 4 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Data Caliper அமெரிக்க நிறுவனம் என்பதால் 2ஆம் நிலை நகரம் என கணக்குப்போடாமல் பெரு நகரங்களுக்கு கிட்டத்தட்ட இணையான சம்பளத்தை அளிக்கிறது. இந்த பணிக்கு ஊதியமாக ஆண்டுக்கு 10 முதல் 17 லட்சம் ரூபாய் வரை அளிக்கிறது. அனுபவம் மற்றும் திறன் அடிப்படையில் சம்பளம் மாறுப்படலாம்.
இந்த நிறுவனத்தில் முழுமையாக வொர்க் ப்ரம் ஹோம் என நிலை இல்லை, ஊழியர்களுக்கு ஏதுவாக ஹைப்ரிட் மோட் வசதியை அளிக்கிறது. அதாவது அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்யலாம்.

Data Caliper நிறுவனம் பற்றி
Data Caliper, அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள அபெக்ஸ் நகரில் தலைமையிடம் கொண்ட கஸ்டம் சாஃப்ட்வேர் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு உயர்தர மென்பொருள் தீர்வுகளை வழங்கும் இந்நிறுவனம், இந்தியாவில் கோயம்புத்தூரில் செயல்படுகிறது.
இப்பணியின் முக்கிய பொறுப்புகள்
இந்த நிறுவனத்தில் Java Full Stack Developer ஆக பணியமர்த்தப்படுபவர்கள், உயர் செயல்திறன் மற்றும் ஸ்கேலபிள் ப்ரென்ட்என்ட் மற்றும் பேக்என்ட் அப்பிளிகேஷன்ஸ் டிசைனிங், டெவலப்பிங், மெயின்டெய்ன் செய்ய வேண்டும். Java Spring மற்றும் Angular தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி என்டர்பிரைஸ் வெப் அப்பிளிகேஷன்ஸ் உருவாக்குவது முக்கிய பணி. REST API மற்றும் வெப் சர்வீஸஸ் டெவலப்மென்டில் வலுவான அனுபவம் தேவை.
தேவையான திறன்கள்
விண்ணப்பதாரர்கள் Java/J2EE புரோகிராமிங் ஃப்ரேம்வொர்க்ஸில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Spring MVC, Spring Security, Spring JPA, Spring Boot, Spring Batch, Spring AOP போன்றவை இதில் அடங்கும். Angular ஃப்ரேம்வொர்க்கில் வலுவான டெவலப்மென்ட் அனுபவம் அவசியம். DevOps செயல்முறைகள் போன்ற CI/CD புரிதல் தேவை. டேட்டாபேஸ் தொழில்நுட்பங்கள், SQL, PLSQL அல்லது வேறு எந்த டேட்டாபேஸ் அனுபவமும் ஏற்றுக்கொள்ளப்படும் என டேட்டா கேலிப்பர் தனது ஜாப் போஸ்ட்டிங்-ல் தெரிவித்துள்ளது.
கல்வித் தகுதி
இளநிலை பட்டம்: B.Sc in Computer Technology, Computer Science, IT அல்லது B.Tech/B.E. in Electronics And Communication, Information Science, Information Technology, Electronic And Communication Engineering, Computers ஆகியவற்றில் இருக்க வேண்டும்.
முதுநிலை பட்டம்: M.Tech in Computers கொண்டவர்கள் முன்னுரிமை பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை
இந்த வேலை வாய்ப்புக்கு ஆர்வமுள்ளவர்கள், தங்கள் விண்ணப்பத்தை உடனடியாக அனுப்பலாம். 4 முதல் 8 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஹைப்ரிட் வேலை முறை, வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதியை அளிக்கும். இது கோயம்புத்தூரில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு சிறந்த வாய்ப்பு. விருப்பம் உள்ளவர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்து இதில் விண்ணப்பிக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications