டிசிஎஸ் (TCS) போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களில் இருந்து மூத்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர்களின் பணிக்காலத்தை பொறுத்து 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான ஊதியத்தை நிவாரணத் தொகைகளாக வழங்கப்படும் விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. திடீர் வேலையிழப்பு ஒரு பெரிய நிவாரணம் வழங்குவது என்பது சற்று ஆறுதல் கொடுத்தாலும், அந்த தொகைக்கு விதிக்கப்படும் வரி விதிப்புகள் என்ன?, அதில் எவ்வளவு விலக்கு பெற முடியும்? என்பதை தற்போது பார்க்கலாம்.
வரிச் சட்டம் என்ன சொல்கிறது?: நிறுவன சீரமைப்பு, செலவு குறைப்பு போன்ற வணிக முடிவுகளால் பணியாளர்களை விடுவிப்பதே வேலையிழப்பு (Layoff) என்று சொல்லப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில், நிதிச் சுமையை குறைக்க நிறுவனங்கள் நிவாரணத் தொகை வழங்குவது வழக்கம். ஆனால், இந்தத் தொகை முழுவதும் வரி விலக்கு பெற்றதல்ல.

வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 17(3)(i)-இன் கீழ், வேலையில் இருந்து நீங்குவதற்கு கிடைக்கும் நிவாரணத் தொகை சம்பளத்திற்குப் பதிலாக பெறும் லாபம் என்றே வகைப்படுத்தப்படுகிறது. இது உங்களின் வழக்கமான சம்பளத்தை போலவே கருதப்பட்டு, உங்களின் மொத்த வருமானத்துடன் சேர்க்கப்பட்டு, வரி விதிக்கப்படும்.
வரி விலக்குகள் எப்படிக் கிடைக்கும்..?: அனைத்து நிவாரணத் தொகைகளுமே வரிக்கு உட்பட்டது கிடையாது. சில குறிப்பிட்டவை வருமான வரியில் இருந்து விலக்கு பெறுகின்றன. ஆனால், இந்த விலக்குகள் பெறுவது அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பொறுத்தே அமையும். மேலும், இந்த விலக்குகள் அனைத்துமே, நிவாரணத் தொகையின் கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே பெற முடியும். அது இல்லையென்றால், வருமான வரித் துறை தணிக்கையின்போது அந்தத் தொகை முழுவதையும் வரிக்கு உட்பட்ட வருமானமாக கருத நேரிடும்.
வரிச் சுமையை குறைக்கும் வாய்ப்பு : தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் (VRS) கீழ் வராத ஊழியர்களுக்கு, பிரிவு 89 ஒரு நிம்மதியை தருகிறது. அதாவது, இச்சட்டத்தின் கீழ், ஒரே நேரத்தில் பெறப்படும் ஒரு பெரிய தொகையின் வரிச்சுமையை, முந்தைய ஆண்டுகளுக்கும் பிரித்து வரி செலுத்த முடியும். இதனால் ஒரே ஆண்டில் அதிக வருமானம் பெற்றதற்கான வரிச்சுமை குறைந்து, மொத்த வரியின் அளவு குறைய வாய்ப்புள்ளது. அதேபோல் பிரிவு 10(10C) படி சலுகையும், பிரிவு 89-ன் சலுகையும் ஒரே நேரத்தில் பெற முடியாது. இதில் ஒன்றை மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.
எனவே, நிவாரணத் தொகையை ஏற்பதற்கு முன், உங்கள் பணி நீக்க கடிதத்தில் சம்பள விவரம், விடுப்புக் கட்டணம், இழப்பீடு, பணிக்கொடை போன்ற ஒவ்வொரு பிரிவும் தெளிவாக பிரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதேபோல், நிறுவனம் வழங்கும் டிடிஎஸ் சான்றிதழில் (Form 16) விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
நிவாரணத் தொகை என்பது அப்போதைக்கு தரும் நிம்மதி மட்டுமே. வரிகள் போக மீதமுள்ள தொகையை பணியாளர்கள் மீண்டும் வேலை கிடைக்கும் வரை காப்பீடு உள்ளிட்ட தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிர்வகிக்க வேண்டும். வேலையிழப்பு நிவாரண தொகை என்பது ஒரு பெரிய தொகையாக தோன்றினாலும், அதில் இருந்து விலக்கு பெறும் பகுதிகளை சரியாகப் புரிந்துகொண்டால், அதிக வரி பிடித்தத்தை தவிர்க்க முடியும்.
More From GoodReturns

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications