இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 12 மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதம் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்வின் காரணமாக மொத்த விலை பணவீக்கம் 12.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் இதன் அளவீடு 10.5 சதவீதமாக இருந்தது.
மேலும் மார்ச் மாதத்தில் 9.75 சதவீதமாக இருந்த மின்சாரம் மற்றும் எரிபொருள் பணவீக்கம் மே மாதத்தில் 37.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 20.94 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து உற்பத்தி பணவீக்கம் 9 சதவீதத்தில் இருந்து 10.83 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல் உணவு விலை பணவீக்கமும் 7.58 சதவீதத்தில் இருந்து 8.11 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உணவு விலை பணவீக்கம் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணம் பழம் மற்றும் காய்கறி பொருட்கள் நுகர்வின் அளவில் ஏற்பட்டு உள்ள மாற்றமும், லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் போக்குவரத்துச் சரியாக இல்லாத காரணத்தால் விநியோக தட்டுப்பாடு அதிகரித்ததன் மூலமும் பணவீக்கம் உயர்ந்துள்ளது.
மேலும் மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்புக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஏற்பட்டு உள்ள விலை உயர்வும் முக்கியக் காரணமாக உள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications