இந்திய FMCG நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்கும் CEOக்கள்.. யார்.. எவ்வளவு சம்பளம்?

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்களின் பணியமர்த்தலில் பற்பல மாற்றங்கள் வந்துள்ளன. ஊழியர்கள் பணிபுரியும் சூழல், சம்பளம் என பலவற்றிலும் பல அதிரடியானமாற்றங்கள் வந்துள்ளன.

இது ஒரு வகையில் ஊழியர்கள் உகந்த ஒரு மாற்றமாகவே பார்க்கப்படுகின்றது. ஏனெனில் வழக்கத்தினை விட சம்பள அதிகரிப்பு விகிதம் மிகப்பெரியளவில் இருந்தது.

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது எஃப் எம் சி ஜி துறையில் இருக்கும் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளுக்கான சம்பள விகிதம் பற்றித் தான். அவர்களின் சம்பள விகிதம் கடந்த நிதியாண்டில் எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

சவுகதா குப்தா

சவுகதா குப்தா

எஃப் எம் சி ஜி துறையில் அதிக சம்பளம் வாங்கிய உயர் அதிகாரிகளில், மாரிக்கோ இடம் பெற்றுள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரியான சவுகதா குப்தா 2022ம் நிதியாண்டில் சம்பள விகிதம் 157% அதிகரித்துள்ளது. குப்தாவின் சம்பள விகிதம் 14.02 கோடி ரூபாயில் இருந்து, 36.1 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சஞ்சீவ் மேக்தா

சஞ்சீவ் மேக்தா

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சீவ் மேக்தாவின் சம்பளம் முந்தைய ஆண்டினை காட்டிலும், 2022ம் நிதியாண்டில் 47% அதிகரித்துள்ளது. இது 19.42 கோடி ரூபாயில் இருந்து, 22 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சுரேஷ் நாரயணன்

சுரேஷ் நாரயணன்

நெஸ்டில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுரேஷ் நாரயணனின் சம்பளம் கடந்த நிதியாண்டில் 9.30% அதிகரித்துள்ளது. இவரின் சம்பளம் 2020ம் காலாண்டர் ஆண்டில் 17.19 கோடி ரூபாயில் இருந்து, 18.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மோஹித் மல்ஹோத்ரா

மோஹித் மல்ஹோத்ரா

டாபர் நிறுவனத்தின் சி ஈ ஓவான மோஹித் மல்ஹோத்ராவின் சம்பளமும் கடந்த நிதியாண்டில் 42.85 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 10.22 கோடி ரூபாயில் இருந்து, 14.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சஞ்சீவ் பூரி

சஞ்சீவ் பூரி

ஐடிசி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சீவ் பூரி-யின் சம்பளம் கடந்த நிதியாண்டில் வெறும் 5% மட்டுமே அதிகரித்துள்ளது. இவரின் சம்பளம 11.95 கோடி ரூபாயில் இருந்து, 12.59 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

வருண் பெர்ரி

வருண் பெர்ரி

பிரிட்டானியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வருண் பெர்ரயின் சம்பளம் கடந்த நிதியாண்டில் 9.03% அதிகரித்துள்ளது. இது 10.52 கோடி ரூபாயில் இருந்து, 11.47 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சுனில் டிசோசா

சுனில் டிசோசா

எனினும் இந்த சம்பள பட்டியலில் கவனம் ஈர்த்த ஒன்று சுனில் டிசோசாவின் சமபளம் தான். இவர் டாடா கன்சியூமர் புராடக்ஸ் நிறுவனத்தின் சி இஓவான இவரின் சம்பளம் முந்தைய ஆண்டினை காட்டிலும் 27.34% குறைந்துள்ளது. முன்னதாக 10.49 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இது பின்னர் 7.62 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

சுதிர் சீதாபதி

சுதிர் சீதாபதி

கோத்ரேஜ் கன்சியுமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக அதிகாரியுமான சுதிர் சீதாபதியன் சம்பளம் 2.66 கோடி ரூபாயாகும். இவர் கடந்த ஆண்டு தான் ஆதி கோத்ரேஜின் மகள் நிசாபா கோத்ரேஜ்ஜூக்கு பதிலாக நியமிகப்பட்டவர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+