பல ஆண்டுகள் பல திறன்களைக் கற்றுக் கொண்டு வேலையைத் தேடினால் அதில் பலர் குறுக்கு வழியில் வாய்ப்பை தட்டிப் பறிப்பது நடப்பதெல்லாம் இப்போது சகஜமாகிவிட்டது. இருந்தாலும் ஏராளமான நல்ல சம்பளம் தரும் வேலைகள் கொட்டிக் கிடக்கத்தான் செய்கின்றன. இதில் அதிக சம்பளம் தரும் 5 வேலைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
1. பைலட்: விமானப் போக்குவரத்துத்துறை இப்போது நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 2023இல் நல்லதொரு வேலைவாய்ப்பை தரும் துறையாக இது மாறிவிட்டது. கமர்ஷியல் மற்றும் ராணுவ பைலட்களுக்கு ஆண்டுக்கு ரூ.9 லட்சம் சம்பளமாகத் தரப்படுகிறது. அனுபவம் ஏற்பட ஏற்பட ஆண்டுக்கு ரூ.70 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வழங்கப்படுகிறது.

தகுதி: 12ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியல் கட்டாயம் படித்திருக்க வேண்டும். அப்படிப் படித்திருந்தால் விமானப் போக்குவரத்துத் துறைக்குத் தேவையான படிப்பை படிக்கலாம்.
2. பிசினஸ் அனலிஸ்ட்: நிதித் தொழிலில் தாக்குப்பிடிப்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. ஒரு சிலர் தான் இந்தத் துறையில் சிறப்பாக விளங்குகின்றனர்.
நிதித்துறை இப்போது நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. பிசினஸ் அனலிஸ்ட், ரிலேஷன்ஷிப் மேனேஜர், பைனான்சியல் அனலிஸ்ட், ரிஸ்க் மேனேஜர் போன்ற பதவிகளுக்கு ஆரம்ப சம்பளமே ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை தரப்படுகிறது.
தகுதி: ஒரு டிகிரி மற்றும் வங்கி செயல்பாடுகள் பற்றிய அனுபவம், பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்டு பற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
3. ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங்: 2023 ஆம் ஆண்டில் நெட்பிளிக்ஸ் கவர்ச்சியான வேலை வாய்ப்புகளை தனது அதிகாரப் பூர்வ வெப்சைட்டில் வெளியிட்டது.
அதில் நாங்கள் எங்களது மெஷின் லேர்னிங் பிளாட்பாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய புராடக்ட் மேனேஜ்மென்ட் வேலைகளை அதிகரித்துள்ளோம்.3 லட்சம் டாலர்களில் இருந்து 9 லட்சம் டாலர்கள் வரை ஆண்டு சம்பளம் வழங்கப்படும். புராடக்ட் மேனேஜர் வேலைக்கு இந்த சம்பளம். அனுபவம் வாய்ந்த சென்ட்ரலைஸ்டு மெஷின் லேர்னிங் பிளாட்பாரத்தில் வேலை செய்திருக்க வேண்டும்.
ஒரு ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் அல்லது மெஷின் லேர்னிங் இன்ஜினியர் 8 வருடத்துக்கு மேல் அனுபவத்தை பெற்று இருந்தால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.45 லட்சம் தரப்படும்.
தகுதி: ஒரு சயின்ஸ் டிகிரி பெற்று ஏஐயில் மாஸ்டர் டிகிரி சேர தகுதி இருக்க வேண்டும்.
4. சாப்ட்வேர் ஆர்கிடெக்ட்: ஒரு சாப்ட்வேர் ஆர்க்கிடெக்டின் ஆண்டு சம்பளம் ரூ.32 லட்சம் வரை இருக்கிறது. டெக்னாலஜியில் குறிப்பிடத்தக்க தடத்தைப் பதித்திருந்தால் இன்னும் கூடுதல் சம்பளம் கிடைக்கும்.
தகுதி: ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அது தொடர்பான டிகிரி. மல்டிபிள் புரோகிராமிங் லாங்குவேஜ்கள் தெரிந்திருக்க வேண்டும்.
5. டேட்டா சயின்டிஸ்ட்: ஒரு டேட்டா சயின்டிஸ்டின் முதல் குறிக்கோள், தற்போதுள்ள டேட்டாவை மேம்படுத்துவதற்கும் தற்போதைய போக்குகளுக்கு ஏற்ப புதுமையான யோசனைகளைக் கொண்டு வருவதும் ஆகும்.
டேட்டா அனாலிசிஸ் மற்றும் ஒட்டுமொத்த யூசர்கள் அனுபவத்தை மேம்படுத்த அல்காரிதம்களை உருவாக்குவதும் இந்த வேலையில் அடங்கும். ஒரு டேட்டா சயின்டிஸ்ட் ஆண்டுக்கு ரூ.14 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்கிறார்.
தகுதி: டேட்டா சயின்ஸில் ஒரு டிகிரி வேண்டும். சிறப்புத் திறன்கள் கூடுதல் சம்பளத்தை பெற்றுத் தரும்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications