ஐடி ஊழியர்களுக்கு அதிகம் சம்பளம் கொடுப்பது யார் தெரியுமா.. இதுதான் உண்மை நிலவரம்..!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை மட்டும் அல்லாமல் பல கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மொத்தமாக மாற்றிய ஒரு துறை என்றால் ஐடி துறை தான்.

கடந்த 20 வருடத்தில் ஐடி துறையில் பணியில் சேர்ந்த ஒருவரின் குடும்பம் எந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை நாம் கண்முன்னே பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஐடி நிறுவனத்தின் ஒரு ஊழியரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? எந்த நிறுவனம் அதிகமாகச் சம்பளம் கொடுக்கிறது தெரியுமா..?!

ஐடி துறை

ஐடி துறை

இந்தியா மொத்தமும் லாக்டவுனில் இருந்தாலும் ஐடி துறை நிறுவனங்கள் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல், சொல்லப்போனால் வழக்கத்தை விடவும் அதிகப்படியான வர்த்தகத்தையும், வருமானத்தையும் இந்த லாக்டவுன் காலத்தில் பெற்றுள்ளது.

ஐடி ஊழியர்களின் சம்பளம்

ஐடி ஊழியர்களின் சம்பளம்

இதன் எதிரொலியாக ஐடி ஊழியர்களின் சம்பள அளவீட்டிலும், ஐடி ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பு எண்ணிக்கை அளவீட்டிலும் பெரிய அளவிலான வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 வருடத்தில் புதிய நிறுவனத்தில் பணியில் சேரும் ஐடி ஊழியர்களான சம்பள உயர்வு அளவீடு 30 சதவீதத்தில் இருந்து 100 முதல் 120 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புரோகிராமர் சம்பளம் எவ்வளவு

புரோகிராமர் சம்பளம் எவ்வளவு

இதுமட்டும் அல்லாமல் திறன் வாய்ந்த ஐடி ஊழியர்கள் ஒன்றுக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகளைக் கையில் வைத்திருக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் இயங்கி வரும் ஐடி நிறுவனங்களில் புரோகிராமர் பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

விப்ரோ

விப்ரோ

விப்ரோ நிறுவனம் புரோகிராமர் பிரிவில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்குச் சராசரியாக வருடம் 4.6 லட்சம் ரூபாய் (4,66,667 ரூபாய்) சம்பளத்தைக் கொடுக்கிறது. மேலும் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிகப்படியாக 8.6 லட்சம் ரூபாயும், குறைவாக 2.4 லட்சம் ரூபாயும் அளிக்கப்படுகிறது.

திறன் மற்றும் நிபுணத்துவம்

திறன் மற்றும் நிபுணத்துவம்

இந்த அதிகப்படியான சம்பளம் மற்றும் குறைவான சம்பளம் என்பது ஒருவரின் திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியவற்றை அடிப்படையாக அமையும். இது விப்ரோ நிறுவனம் மட்டும் அல்லாமல் அனைத்து நிறுவனத்திற்கும் பொருந்தும்.

காக்னிசென்ட்

காக்னிசென்ட்

காக்னிசென்ட் நிறுவனம் புரோகிராமர் பிரிவில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்குச் சராசரியாக வருடம் 4.8 லட்சம் ரூபாய் (4,84,968 ரூபாய்) சம்பளத்தைக் கொடுக்கிறது. மேலும் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிகப்படியாக 8.5 லட்சம் ரூபாயும், குறைவாக 2.7 லட்சம் ரூபாயும் அளிக்கப்படுகிறது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனம் புரோகிராமர் பிரிவில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்குச் சராசரியாக வருடம் 4.7 லட்சம் ரூபாய் (4,74,384 ரூபாய்) சம்பளத்தைக் கொடுக்கிறது. மேலும் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிகப்படியாக 7.66 லட்சம் ரூபாயும், குறைவாக 3.13 லட்சம் ரூபாயும் அளிக்கப்படுக்கிறது.

டிசிஎஸ்

டிசிஎஸ்

டிசிஎஸ் நிறுவனம் புரோகிராமர் பிரிவில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்குச் சராசரியாக வருடம் 5.08 லட்சம் ரூபாய் (5,08,304 ரூபாய்) சம்பளத்தைக் கொடுக்கிறது. மேலும் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிகப்படியாக 8.72 லட்சம் ரூபாயும், குறைவாக 2.8 லட்சம் ரூபாயும் அளிக்கப்படுகிறது.

ஹெச்சிஎல்

ஹெச்சிஎல்

ஹெச்சிஎல் நிறுவனம் புரோகிராமர் பிரிவில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்குச் சராசரியாக வருடம் 4.83 லட்சம் ரூபாய் (4,83,296 ரூபாய்) சம்பளத்தைக் கொடுக்கிறது. மேலும் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிகப்படியாக 8.6 லட்சம் ரூபாயும், குறைவாக 4.83 லட்சம் ரூபாயும் அளிக்கப்படுக்கிறது.

அக்சென்சர்

அக்சென்சர்

 

அக்சென்சர் நிறுவனம் புரோகிராமர் பிரிவில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்குச் சராசரியாக வருடம் 6.06 லட்சம் ரூபாய் (6,06,925 ரூபாய்) சம்பளத்தைக் கொடுக்கிறது. மேலும் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிகப்படியாக 10 லட்சம் ரூபாயும், குறைவாக 3 லட்சம் ரூபாயும் அளிக்கப்படுக்கிறது.

டெக் மஹிந்திரா

டெக் மஹிந்திரா

டெக் மஹிந்திரா நிறுவனம் புரோகிராமர் பிரிவில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்குச் சராசரியாக வருடம் 4.50 லட்சம் ரூபாய் (4,50,743 ரூபாய்) சம்பளத்தைக் கொடுக்கிறது. மேலும் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிகப்படியாக 8.4 லட்சம் ரூபாயும், குறைவாக 2.5 லட்சம் ரூபாயும் அளிக்கப்படுக்கிறது.

கேப்ஜெமினி

கேப்ஜெமினி

கேப்ஜெமினி நிறுவனம் புரோகிராமர் பிரிவில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்குச் சராசரியாக வருடம் 5.59 லட்சம் ரூபாய் (5,59,877 ரூபாய்) சம்பளத்தைக் கொடுக்கிறது. மேலும் இப்பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு அதிகப்படியாக 10.4 லட்சம் ரூபாயும், குறைவாக 2.8 லட்சம் ரூபாயும் அளிக்கப்படுக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+