இந்திய பொருளாதாரம் கடந்த ஓராண்டில் உலகளாவிய மந்தநிலை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும் நாட்டின் வர்த்தகம் வளர்ச்சி பாதையில் உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பல முக்கிய தலைமை நிர்வாக அதிகாரிகள் FY23 இல் வியக்க வைக்கும் அளவில் அதிகப்படியான சம்பளத்தை பெற்றுள்ளனர்.
ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் முதல் எஃப்எம்சிஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் வரை, இந்தியாவின் பல தொழில்துறை முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்கள் மார்ச் 31, 2023 அன்று முடிவடைந்த நிதியாண்டுக்கான சம்பள அளவு கடந்த ஒரு மாதத்தில் வெளியாகியுள்ளது.

Wipro CEO Thierry Delaporte: தியரி டெலாபோர்ட் 2023 ஆம் நிதியாண்டின் போது 10 மில்லியன் டாலர், அதாவது சுமார் 82.2 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தை பெற்றுள்ளார்.
TCS CEO Rajesh Gopinanthan: முன்னாள் டிசிஎஸ் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் 2022-23 நிதியாண்டில் ரூ.29.16 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 13% அதிகம்.
Infosys CEO Salil Parekh: சலில் பாரிக் 2023 நிதியாண்டில் மொத்தம் 56.4 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். இது கடந்த நிதியானண்டை காட்டிலும் 21% குறைவாகும்.
HUL CEO Sanjiv Mehta: ஹிந்துஸ்தான் யூனிலீவர் சிஇஓ சஞ்சீவ் மேத்தா 2023 ஆம் நிதியாண்டில் 22.36 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். இவர் பதவி விலக உள்ள நிலையில் ரோஹித் ஜாவா ஹிந்துஸ்தான் யூனிலீவரின் நிர்வாக இயக்குநராகவும் (MD) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (CEO) ஜூன் 27 அன்று பொறுப்பேற்கிறார்.
SBI chairman Dinesh Khara: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் தினேஷ் காரா 2023 ஆம் நிதியாண்டில் 37 லட்சம் ரூபாயை சம்பளமாக பெற்றார். கடந்த ஆண்டு இதன் அளவு 34.42 லட்சம் ரூபாயாக இருந்தது.
Tata Power CEO Praveer Sinha: பிரவீர் சின்ஹா 2023 நிதியாண்டில் 9 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்
Tata Chemicals CEO R Mukundan: டாடா பவர் சிஇஓ போலவே, டாடா கெமிக்கல்ஸ் ஆர் முகுந்தனும் 16% சம்பள உயர்வு உடன் 2023 ஆம் நிதியாண்டில் 8 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார்.
Voltas CEO Pradeep Bakshi: பிரதீப் பக்ஷி 2023 ஆம் நிதியாண்டில் 3.8 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார். இது கடந்த ஆண்டை காட்டிலும் 22% அதிகமாகும்.

IHCL CEO, Puneet Chhatwal: 2022-23 ஆம் நிதியாண்டில் டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் இந்தியன் ஹோட்டல்ஸ் லாபம் 1003 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சிஇஓ சம்பளம் 37 சதவீதம் உயர்ந்து 18.23 கோடி ரூபாயாக உள்ளது.
Trent CEO P. Venkatesalu: டாடா குழுமத்தின் ரீடைல் செயின் நிறுவனமான டிரென்ட் லாபத்தில் 10 மடங்கு வளர்ச்சியும், வருவாயில் 80 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது. டிரென்ட் நிறுவனத்தின் சிஇஓ பி.வெங்கடேசலு சம்பளம் 62 சதவீதம் அதிகரித்து 5.12 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications