இந்த நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரையில் அனைத்தையும் ஆன்லைனில் மக்கள் பார்த்து வரும் வேளையில் தற்போது திருமணங்களும் ஆன்லைன் வாயிலாகவே நடக்கும் நிலை உருவாகியுள்ளது. முதலில் நிச்சயதார்த்தம் தான் ஆன்லைன் வாயிலாக நடந்து வந்தது, ஆனால் தற்போது திருமணமே நடந்துள்ளதால் இணையவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூரைச் சேர்ந்த அத்னான் முகமது, தனது திருமணத்திற்காக இந்தியா வர முடியாமல் போனது. துருக்கி நாட்டில் வேலை செய்யும் அவர், தான் வேலை செய்யும் நிறுவனத்திடம் இருந்தும், மேலாளரிடமும் விடுமுறை பெற முடியவில்லை.

இந்த சூழ்நிலையில், மணமகளின் உடல்நலம் குன்றிய தாத்தாவின் கடைசி நிமிட விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, இரு குடும்பத்தின் ஒப்புதல் உடன் வீடியோ கால் மூலம் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
இந்தியாவில் உள்ள மணமகள் மற்றும் துருக்கியில் உள்ள மணமகன் இணைந்து, வீடியோ கால் மூலமாக நிகாஹ் நடைபெற்று உள்ளது. திருமணத்தில் நடக்கும் அனைத்து சடங்குகளும் ஆன்லைன் வாயிலாக நடித்துள்ளது. இதன் மூலம், தொலைவில் இருந்தாலும், இணையத்தின் மூலம் இரு மனங்களும் இணைந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் இதுபோன்று பல திருமணங்கள் நடப்பது சமீப காலத்தில் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஜூலை மாதம், நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதியில் மாட்டிக்கொண்டதால் ஒரு ஜோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்துகொண்டனர்.
அதே நேரத்தில் சமீப காலமாக மக்களின் வாழ்க்கையை வேலை மூழ்கடித்து விடுகிறது. இதேபோல் பணியிடத்தில் கடினமான கொள்கைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மணமகனின் வேலை நிறுவனம், அவருக்கு விடுப்பு அளிக்க மறுத்தது தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications