ஹிண்டால்கோ நிறுவனம் தனது ஜூன் காலாண்டு அறிக்கையினை புதன் கிழமையன்று அறிவித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையில் 709 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில், வரிக்கு முந்தைய காலாண்டில் லாபம் 1,063 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

ஆதித்யா பிர்லா குழுமத்தினை சேர்ந்த இந்த நிறுவனம், கொரோனா நிவாரணம் மற்றும் தொண்டு பங்களிப்புகளுக்கான சிலவற்றினை பங்களித்தல் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பு காரணமாக வரிக்கு பிந்தைய லாபம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு இந்த நிறுவனம் நோவெலிஸ் செயல்பாடுகள் காரணமாக 140 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு மூலம் கிடைக்கும் வருவாய் இந்த ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 25,283 கோடி ரூபாயாக உள்ளது. இதே முந்தைய ஆண்டில் 29,972 ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சதிஷ் பாய், கொரோனா நெருக்கடியின் மத்தியில் பலவீனமான சூழ்நிலையை மீறி முன்னேறுவதற்கான எங்கள் திறனைப் பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்களின் அலுமினிய ஸ்மெல்ட்டர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமான திறன் கொண்டவை. ஆக நாங்கள் எங்கள் விற்பனை அளவை பராமரித்தோம்.
கிட்டதட்ட 80% விற்பனையாகும். இது இந்த துறையில் முன்னணியில் வர வழிவகுத்தது, நாங்கள் உள்நாட்டு சந்தையிலும் சரி, சர்வதேச சந்தையிலும் சரி தேவை அதிகரித்துள்ளதை கண்டுள்ளோம்.
இதே மற்றொரு அறிக்கையில், அலுமினியம் மற்றும் காப்பரின் உலகளாவிய தலைவரான இந்த நிறுவனம், இந்தியா அலுமினிய வணிகத்தின் வலுவான வளர்ச்சியினால் உந்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறைந்த உள்ளீட்டு செலவு, செயல்பாடுகளின் நிலைத் தன்மை மற்றும் செலவு சேமிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான நான்கு வருட சாதனை வருவாய்க்கு பிறகு நோவெலிஸ் நிகர வருமானத்தை முதல் காலாண்டில் 22 மில்லியன் டாலர்களாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தின் மத்தியில் அதன் நிதி முடிவுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதன் மாதாந்திர தேவை அதிகரித்துள்ள நிலையில் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications