அதானி குழும முறைகேட்டில் செபி தலைவர் சிக்கினார்..! ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஷாக் தகவல்..!

சென்னை: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதானி குழுமத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், தற்போது புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் அதானி குழுமத்தின் மீதான முறைகேடு சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த முறை சற்றும் எதிர்பார்க்காத வகையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யின் தலைவர் மாதபி புச்சு அதானி குழும பங்குகள் முறைகேடாக உயர்த்தப்பட்டதில் தொடர்புடையவராக உள்ளார் என்ற குற்றச்சாட்டைச் செபி முன் வைத்துள்ளது.

அதானி குழும முறைகேட்டில் செபி தலைவர் சிக்கினார்..! ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஷாக் தகவல்..!

ஹிண்டன்பர்க் ரிசர்ச்-ன் புதிய குற்றச்சாட்டின்படி, செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் "அதானி நிறுவனத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டும் எந்தவிதமான ஒழுங்குமுறை நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்ற தொனியிலேயே அதானி குழுமத்தின் நிர்வாகத்தினர் பதில் அளிக்கக் காரணம் மாதபி புச்டன் அதானி குழுமத்திற்குத் தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம்" என்று தெரிவித்துள்ளது.

"எங்கள் கணிப்புக்கு ஏற்றப்படி மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் வினோத் அதானி பயன்படுத்திய அதே மர்மமான பெர்முடா மற்றும் மொரிஷஸ் பண்ட் நிறுவன கட்டமைப்புகளில் பங்கு வைத்திருந்தனர் என்பது எங்களுக்குத் முன் தெரியவில்லை" என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில், தங்களுக்குக் கிடைத்த விசில்ப்ளோவர் வெளியிட்ட ஆவணங்கள் படி மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் 2015-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள IPE Plus Fund 1 என்ற பண்டில் கணக்கைத் தொடங்கியுள்ளனர்.

அதானி குழும முறைகேட்டில் செபி தலைவர் சிக்கினார்..! ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஷாக் தகவல்..!

இந்த கணக்கில் செய்யப்பட்ட முதலீட்டுக்கான ஆதாரமாக அவர்கள் சம்பளம் பெற்ற பணத்தை முதலீடு செய்வதாக குறிப்பிட்டு உள்ளனர். மேலும் புச் தம்பதியின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் என்றும் IIFL-ல் ஒரு முக்கிய அதிகாரி கையெழுத்திட்டு உறுதி செய்துள்ளதாக அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. IPE Plus Fund 1 என்ற பல அடுக்குகள் கொண்ட பண்ட் நெட்வொர்க்-ஐ நிர்வாகம் செய்வது IIFL அமைப்பு தான்.

அதானி குழும முறைகேட்டில் செபி தலைவர் சிக்கினார்..! ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஷாக் தகவல்..!

மேலும், மாதபி புச் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் செபி-யின் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதற்கு சில வாரங்களுக்கு முன்பாக, அதாவது 2017 மார்ச் 22-ஆம் தேதி, அவரது கணவர் தவால் புச், மொரிஷஸில் உள்ள நிதி நிர்வாக நிறுவனமான ட்ரைடென்ட் டிரஸ்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது மற்றும் தனது மனைவியின் ஜாயின்ட் கணக்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார். தவால் புச் குறிப்பிடும் கணக்கு Global Dynamic Opportunities Fund ("GDOF") தொடர்புடையது.

இந்த கடிதம் மூலம் மாதபி புச் மற்றும் தவால் புச்-க்கு சொந்தமான கணக்கு, தவால் புச்-ன் முழு கட்டுப்பாட்டிற்கு வந்தது.

அதானி குழும முறைகேட்டில் செபி தலைவர் சிக்கினார்..! ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஷாக் தகவல்..!

இதற்கு பின்னர், 2018 பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிடப்பட்ட கணக்கு விபத்தில், மாதபி புச்சின் பர்சனல் மெயில் ஐடி-க்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இந்த கட்டமைப்பின் முழு விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதில், "GDOF செல் 90 (IPE Plus Fund 1)" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் புச் தம்பதியின் இந்த பண்டில் இருக்கும் பங்கின் மதிப்பு 872,762.25 டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழும முறைகேட்டில் செபி தலைவர் சிக்கினார்..! ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஷாக் தகவல்..!

பின்னர், 2018 பிப்ரவரி 25-ஆம் தேதி, மாதபி புச் செபி-யின் முழுநேர உறுப்பினராக இருந்தபோது, தனது கணவரின் பெயரில் வணிகம் செய்து, தனது தனிப்பட்ட ஜிமெயில் மூலம் இந்திய இன்ஃபோலைன் நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், "GDOF செல் 90 (IPE Plus Fund 1)" பண்டிலd உள்ள பங்குகளை விற்பனை செய்யும்படி கோரியுள்ளார்.

அதானி குழும முறைகேட்டில் செபி தலைவர் சிக்கினார்..! ஹிண்டன்பர்க் வெளியிட்ட ஷாக் தகவல்..!

இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பெயரில் தொடுக்கப்பட்டு வழக்கு விசாரணையில், அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் யார் என்பது குறித்த விசாரணையில் SEBI தோல்வி அடைந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், "SEBI உண்மையாகவே வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கண்டறிய விரும்பியிருந்தால், அதன் தலைவர் தன்னை முதலில் கண்டுபிடித்திருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

இதனால் அதானி விவகாரத்தில் SEBI-யின் மந்தமான செயல்பாடுகள் ஆச்சரியமளிக்கவில்லை என்றும் ஹிண்டன்பர்க் கூறியுள்ளது. இந்த புதிய குற்றச்சாட்டுகள், அதானி விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

SEBI மற்றும் அதானி குழுமத்தின் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. இந்த தகவல்கள் அதானி விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஜூலை மாத துவக்கத்தில் செபி ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பை நேரில் வந்து ஆஜராகும் படி ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இதை கடுமையாக விமர்சனம் செய்த ஹிண்டன்பர்க் தற்போது செபி தலைவர் மீதே பெரிய குண்டை தூக்கிப்போட்டு உள்ளார்.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கையில், 2022 ஆம் ஆண்டில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, செபி தலைமை அதிகாரி மாதபி புச் (Madhabi Buch) இரண்டு முறை சந்தித்தார். இதை தி இந்து பிசினஸ் லைன் பத்திரிக்கை, செபி தலைவரைச் சந்தித்த முதல் முக்கிய தொழிலதிபர்களில் முதன்மையான நிகழ்வு என குறிப்பிட்டதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சந்திப்புகளில் ஒன்று, அதானி குழுமம் 10.5 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் ஏ.சி.சி மற்றும் அம்புஜா சிமெண்ட் நிறுவனங்களைக் கையகப்படுத்தியது தொடர்பானது.

இரண்டாவது சந்திப்பு 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்தச் சந்திப்பிற்கு என்ன காரணம் என்பது இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என தகவல் உரிமைச் சட்ட (RTI) மனு மூலம் பெறப்பட்ட தகவல் என ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தெரிவிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+