சென்னை: ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்னும் ஷார்ட் செல்லிங் நிறுவனம், ஒரு நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகள், மோசடிகளைக் கண்டறிந்து அதை வெளியிடும் முன்பு அந்த நிறுவனத்தின் பங்குகளில் ஷார்ட் செய்து லாபம் பார்க்கும் வழக்கத்தைக் கொண்டு உள்ளது. இப்படி தான் அதானி குழுமம் குறித்து ஜனவரி 2023ல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து அதானி பங்குகளில் ஷார்ட்டிங் செய்து பல மில்லியன் டாலர்களை லாபமாக பெற்றது.
ஆனால் அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் ரிசர்ச் தொடர்பான சர்ச்சை 2வது வருடமாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் SEBI தலைவர் மாதபி புச் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் சந்தையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கடந்த 2 நாட்களாகச் சந்தை வல்லுனர்கள் கணிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் எப்படி இருக்கிறது.

இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 400 புள்ளிகள் வரையில் சரிந்தாலும், மதியம் இந்திய பங்குச்சந்தை சரிவில் இருந்து மீண்டு வந்துள்ளது. நிஃப்டி 24,400 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. வங்கி, உலோகம் மற்றும் IT பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
அதானி குழுமப் பங்குகள் காலை வர்த்தகத்தில் 7 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்திருந்த வேளையில், மதியம் 2-3 சதவிகிதம் வரை வீழ்ச்சியடைந்தன. ஆனால், மொத்த சந்தையில் பெரிய அளவிலான தாக்கம் ஏற்படவில்லை என்பதை இன்றைய வர்த்தகத்தின் ஒருவரி விமர்சனம்.
பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI, ஹிண்டன்பர்க் ரிசர்ச் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு விவகாரத்தில் முதலீட்டாளர்கள் நிதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையை எச்சரிக்கையுடன் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சந்தை வல்லுநர்கள், இந்த சம்பவம் சந்தையைப் பெரிதாகப் பாதிக்காது என்றும், இந்த பங்குச்சந்தை நிலைபெற்றுத் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். உலகளவில் பார்த்தால், ஜப்பான் விடுமுறையில் இருப்பதால், சந்தை நிலைத்தன்மை காணப்படுகிறது. அமெரிக்கா மற்றும் சீனாவின் பொருளாதார தரவுகள் சந்தையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜியோஜிட் நிதி சேவைகளின் முதலீட்டு உத்தி வல்லுநரான வி.கே. விஜயகுமார், "ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ள தகவல்கள் சந்தையைப் பெரிய அளவில் பாதிக்காது" என்று தெரிவித்துள்ளார். மேலும், " இதுபோன்ற நேரத்தில் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் வழக்கமானது. எனவே முதலீட்டாளர்கள் Buy on Dips அடிப்படையில் முதலீடு செய்வது லாபம் அளிக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications