சென்னை: இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. 2023 ஆம் ஆண்டில் ஹிண்டன்பர்க் வெளியிட்ட முதல் அறிக்கையில் இருந்து சமீபத்தில் வெளியிட்ட SEBI தலைவர் மாதவி புச் மீதான குற்றச்சாட்டுகள் நிறைந்த அறிக்கை வரையில் அதானி குழுமத்தின் முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், அதானி குழுமம் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் தாக்கல் செய்துள்ளார். ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் புதிய குற்றச்சாட்டுகள் SEBI தலைவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் அதானி குழுமம் தொடர்பான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம், அதானி குழுமம் முறைகேடாக அதன் பங்ரு விலையை உயர்த்தியதும், செபி விதிமுறைகளை மீறி செயல்பட்டது தொடர்பாக ஹிண்டன்பர்க் ரிச்ர்ச் வெளியிட்ட அறிக்கையை மையப்படுத்தி 24 விசாரணைகளை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று SEBI-க்கு உத்தரவிட்டிருந்தது. அதில் 22 விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டு விசாரணைகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் புதிய குற்றச்சாட்டுகள் காரணமாக, நிலுவையில் உள்ள விசாரணைகளுக்கும் காலக்கெடு விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. அதானி குழுமம் தொடர்பான விசாரணை முடிவுகள் முதலீட்டாளர்களின் நலனுக்கு முக்கியமானது என்றும், இந்த விவகாரத்தில் முழுமையான தகவல் வெளியிடப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் விஷால் திவாரி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளில், மாதவி புச் மற்றும் அவரது கணவர், அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பண்ட்-ஐ கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி கட்டுப்படுத்தியதாகவும், பங்கு விலையை உயர்த்துவதற்காக இந்த பண்ட் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது என்றும் விஷால் திவாரி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக SEBI தலைவர் மறுப்பு தெரிவித்திருந்தாலும், இது பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாதபி புச் வெளியிட்ட விளக்க அறிக்கைக்குப் பின்பு ஹிண்டன்பர்க் வெளியிட்ட பதிலில், மாதவி புச் மற்றும் அவரது கணவர் பெர்முடா மற்றும் மொரிஷியஸில் உள்ள மர்மமான பண்டில் முதலீடு செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இந்த நிதியை நிர்வகித்தவர் அவரது கணவரின் சிறு வயது நண்பரும், அதானி குழுமத்தின் உயர் அதிகாரியான அனில் அஹூஜா என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
SEBI, அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பாக விசாரணையை நடத்தியபோது, மாதவி புச் தனது சொந்த நிதியையும், இந்த மர்மமான பண்டில் முதலீடு செய்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது. இது பெரும் பிரச்சனை என ஹிண்டன்பர்க் தனது பதிலில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications