அதானி குழுமத்தில் நிலவி வரும் நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக அதானி குழுமத்திற்கும் மூன்று வெளி நாட்டு நிறுவனங்களுக்கும் மோசடியான பரிவர்த்தனைகளில் தொடர்பு இருப்பதாகவும், இதில் விதில் மீறல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானிக்கும், வினோத் அதானிக்கும் 3 வெளி நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
செபி கவனம்
இந்த சந்தேகத்தின் மத்தியில் அதானி குழுமத்தினை செபி வாரியம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அறிக்கையின் படி, பட்டியலிடப்படாத மூன்று நிறுவனங்களும், பல்வேறு முதலீட்டு பணபரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கிய பயனாளி
வினோத் அதானி இந்த ஷெல் நிறுவனங்களில் பயனடையும் ஒரு முக்கிய பயனாளி. இதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றார். அதற்கான வெளிப்படையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற நிலையில், தற்போது இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.
என்னென்ன நிறுவனங்கள்?
அதானி குழுமத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் மொரிஷியஸை தளமாகக் கொண்டதாகவும் தெரிகிறது. இதில் க்ரூனல் டிரேட் அன்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட், கார்டேனியா டிரேட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட், துபாயில் உள்ள எலக்ட்ரோஜன் இன்ஃப்ரா ஆகியவை தொடர்புடையதாக கூறப்படும் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்களின் மூலம் தான் வினோத் அதானி பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய சட்டப்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நேரடி உறவினர்கள், புரோமோட்டர் குழுமங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் தொடர்புடைய நபர்களாக பார்க்கப்படுகின்றனர். ஆக சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் வேறு நிறுவனங்கள் செய்யும் பரிவர்த்தனைகளை பற்றி பங்கு சந்தைக்கு தெரியப்படுத்த வேண்டும். அதுவும் பங்குதாரர்களின் ஒப்புதலும் வேண்டும். ஒரு வேளை சட்டத்தினை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
செபியின் கருத்து என்ன?
ஆக கடந்த 13 ஆண்டுகளில் அதானி குழுமத்தின் பங்கு சந்தைக்கு வராத நிறுவனங்களுடன், 3 வெளிநாட்டு நிறுவனங்கள், அதுவும் வினோத் அதானி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் இருப்பதாகவும் , இதனை அதானி குழுமம் வெளிப்படுத்தவில்லை. இந்த விசாரணை தொடர்பான அதிகாரப்பூர்வமாக அதானி குழுமமோ, செபியோ வெளியிடவில்லை.
அதானி ஹிண்டர்ன்பர்க் விவகாரம்
இந்த விவகாரம் தொடர்பாக அதானி குழுமம் தரப்பில், வினோத் அதானி, அதானி குழுமத்தின் உறுப்பினர் மற்றும் புரோமோட்டர் குழுவின் ஒரு பகுதியாக உள்ளார். ஆனால் பட்டியலிடப்பட்ட அதானி குழும நிறுவனங்களில் எந்த பதவியையும் வகிக்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளது. அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு இந்த நடவடிக்கையானது வந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications